Home> Movies
Advertisement

நடிகர் பரத்தின் ‘காளிதாஸ்’ படத்தில் ஆண்ட்ரியா!

நடிகர் பரத்தின் ‘காளிதாஸ்’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு அட்டகாசமான பாடலை பாடியுள்ளார்.

நடிகர் பரத்தின் ‘காளிதாஸ்’ படத்தில் ஆண்ட்ரியா!

கடுகு படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பரத் தற்போது ‘காளிதாஸ்’ என்ற படத்தில் முதல் முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். நாளைய இயக்குனர் புகழ் ஸ்ரீசெந்தில் இயக்கி வரும் இந்த படத்தில் மலையாள நடிகை ஆன் ஷீத்தல் நாயகியாக நடிக்கின்ரார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு அட்டகாசமான பாடலை பாடியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு பின்னர் போலீஸ் கேரக்டருக்கு ஒரு கவுரவம் வந்துள்ளதால் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More