Home> Movies
Advertisement

அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு ஹவுஸ் ஓனர் வைத்த கெடு.. மாயா போடும் திட்டம்

Amudhavum Annalakshmiyum August 24 Update:  அமுதாவுக்கு ஹவுஸ் ஓனர் வைத்த கெடு.. மாயா போடும் திட்டம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவுக்கு ஹவுஸ் ஓனர் வைத்த கெடு.. மாயா போடும் திட்டம்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா ரெஜிஸ்டர் ஆபிஸ் ஓடி வர பழனி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அமுதா ஹவுஸ் ஓனரிடம் வந்து ஏன் இப்படி பண்ணுனீங்க என கேக்க, அவர் உன் புருஷனோட அக்கா தாம்மா வீடு வேண்டாம்னு சொன்னா அதான் பழனி தம்பிக்கு குடுத்துரலாம்னு முடிவு பண்ணி வரச் சொல்லிட்டேன் என சொல்ல, அமுதாவுக்கு பரமு செய்த வேலை என தெரிய வருகிறது. 

அடுத்ததாக அமுதா ஹவுஸ் ஓனரிடம் மீண்டும் கெஞ்ச, பழனி உடனே பத்திரத்தை முடித்தாக வேண்டும் என சொல்ல ஹவுஸ் ஓனர் யோசித்து விட்டு அமுதாவிடம் ஒரு ரெண்டு நாள் டைம் தர்றேன் அதுக்குள்ள பணத்தை கொண்டு வந்து குடுக்கலேன்னா பழனி தம்பிக்கு வீட்டை குடுத்துருவேன் என்று தனது முடிவை கூறுகிறார்.

இதையடுத்து அமுதா வீட்டுக்கு வர அனைவரும் என்னாச்சு என கேக்க, அமுதா வீடு நம்ம கையை விட்டு போகலை என பரமுவை பார்க்க, பரமு பம்ம அமுதா பரமுவை போட்டுக் கொடுக்காமல் இது பழனியோட வேலை என்று சொல்ல பரமு நிம்மதி பெருமூச்சு விடுகிறாள். அமுதா அன்னமிடம் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணனும் என சொல்கிறாள்.

பரமு தனியாக வந்து அப்பா தப்பிச்சோம் என நிம்மதி பெருமூச்சு விடஅமுதா அவளிடம் நீங்களே பிறந்த வீட்டுக்கே துரோகம் பண்றீங்களே, இது உங்களுக்கு நல்லாவா இருக்கு.. நீங்க தான் இதை செஞ்சீங்கன்னு எல்லார்கிட்டயும்  சொல்லாமல் பாவம்னு விட்டுட்டேன் என சொல்கிறாள். அடுத்து மாயா செந்தில் வீட்டுக்கு வர அமுதா டாக்டரிடம் நர்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டனே என்று கேட்க மாயா டாக்டர் கண்ணுல மருந்து போட்டு செக் பண்ணிட்டு ரிப்போர்ட் குடுக்க சொன்னாங்க என மழுப்புகிறாள்.

செந்தில் மாயாவிடம் நீங்க ஏற்கனவே என் கூட பழகிருக்கீங்களா என கேக்க, மாயா இல்லை என சொல்ல செந்தில் அவளிடம் உங்க வாய்ஸ் எனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட வாய்ஸ் மாதிரி இருக்கு என்று சொல்ல மாயா மைண்ட் வாய்சில் இன்னும் என் குரல் ஞாபகம் இருக்குல்ல என நினைத்து கொள்கிறாள். செந்தில் அமுதாவிடம் பணத்துக்கு என்ன பண்ணப் போற என கேட்க மாயா வெளியே வந்து இந்த குடும்பத்துல ஒரு பிரச்சனை இருக்கு, 20 லட்சம் ரூபா தேவைப்படுது.. நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு எல்லார் மனசுலயும் இடம் பிடிக்க இதை பயன்படுத்தலாம் என திட்டம் தீட்டுகிறாள்.

வீட்டுக்கு வந்த மாயா பணத்தை அப்பா கிட்டயே கேட்டுரலாமா என எண்ணியபடி அப்பாவுக்கு போன் பண்ணி எனக்கு உடனடியா 20 லட்சம் வேண்டும் என்று சொல்ல மாயா அப்பா உடனடியா பணத்தை கொடுத்து  விடுவதாக சொல்லி ஆட்கள் மூலம் பணத்தை கொடுத்து அனுப்ப அவர்கள் அவளிடம் 20 லட்ச ரூபா பணத்தை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

மறுபக்கம் அமுதா வட்டிக்கடைக்காரரிடம் சென்று கடன் கேக்க, அவர் இப்போதைக்கு இல்லை என கைவிரிக்க அமுதா செய்வதறியாது தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More