Home> Movies
Advertisement

ரூல்ஸ் மீறப்படும்... விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பெயர் என்ன?.. வெளியானது அப்டேட்


விக்ரம் படத்தில் ஃபகத் பாசிலின் கதாபாத்திர பெயர் வெளியாகியுள்ளது.

ரூல்ஸ் மீறப்படும்... விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பெயர் என்ன?.. வெளியானது அப்டேட்

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்துள்ளன. கமல் ஹாசன் மலேசியா, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், தனியார் சேனலில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ப்ரோமோட் செய்துவருகிறார்.

fallbacks

லோகேஷ் தரப்பில் வித விதமாக ப்ரோமோக்கள் வெளியிடப்படுகின்றன. அந்தவகையில் பஞ்ச தந்திரம் படத்தில் கமல் நண்பர்களாக நடித்தவர்களை வைத்து  படத்தின் புதிய ப்ரோமோ சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துவிட்டார் என புகழ்ந்து தள்ளினர்.

படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம்தான் விக்ரம் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என கமல் ஹாசனும் கூறியிருந்தார். 

fallbacks

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஃபகத் பாசில் முதல்முறையாக கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் படத்தில் இருப்பதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்நிலையில் விக்ரம் படத்தில் ஃபகத் பாசிலின் கதாபாத்திர பெயர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் அவர் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

இதுதொடர்பான அறிவிப்பை படத்தை தயாரித்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் மீறப்படும்” என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் பதிவு வைரலாகிவருகிறது.

மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More