Home> Movies
Advertisement

ஏகே62 அரசியல் படமா? உண்மை பின்னணி என்ன?

'ஏகே62' படத்தில் அதிகளவில் இடம்பெற்றிருந்த அரசியல் சார்ந்த வசனங்களை நீக்குமாறு அஜித், இயக்குனரிடம் கூறியுள்ளார்.  

ஏகே62 அரசியல் படமா? உண்மை பின்னணி என்ன?

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் கூட்டணி இணைந்து தற்போது 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பு  பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாதில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  இந்த ஆக்ஷன் நிறைந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

fallbacks

மேலும் படிக்க | முதல்வர் ஆக ஆசைப்படும் தனுஷ்! நிறைவேறுமா?

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் ஏகே62 படம் உருவாக இருக்கிறது.  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  விக்னேஷ் சிவன் உணவு மாஃபியா குறித்த கதையை எழுதியிருப்பதாகவும், இப்படத்தில் அஜித் உணவகம் வைத்திருப்பவராக நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சில செய்திகள் கிசுகிசுக்கப்படுகின்றன.  மேலும் வெளியான மற்றொரு தகவலின்படி, 'ஏகே62' படத்தில் அரசியல் ரீதியான பல வசனங்களை அஜித் பேசும்  வகையில் எழுதியுள்ளதாகவும், இதனை படித்த அஜித் உடனடியாக இதுபோன்ற வசனங்களை நீக்குமாறும் இயக்குனரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

fallbacks

அஜித் இதுவரை அவரது படங்களில் அதிகப்படியான அரசியல் வசனங்களை பேசியதில்லை என்பது தெரிந்த ஒன்றே.  இருப்பினும் இந்த தகவல்கள் உண்மையானதா என்பது குறித்த நம்பகமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.  மேலும் அஜித் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, மற்றொரு படத்திற்கான கதையை கேட்கமாட்டார் என்று கூறப்படுகிறது, அதனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More