Home> Movies
Advertisement

முதன் முறையாக இந்த தமிழ் இயக்குனரின் படத்தில் ஸ்ருதிஹாசன்!

Actress Shruti Haasan: தமிழ் படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ருதிஹாசன், பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.  

முதன் முறையாக இந்த தமிழ் இயக்குனரின் படத்தில் ஸ்ருதிஹாசன்!

Actress Shruti Haasan: உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமின்றி பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார்.  ஸ்ருதிஹாசன் சில வருடங்களாக எந்த ஒரு புதிய தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.  தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் புதிய படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.  இசையமைப்பாளர் டி இமான் பார்த்திபன் மற்றும் ஸ்ருதிஹாசன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பார்த்திபனின் அடுத்த காதல் படத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் டி இமான் இசையில் உருவாகி உள்ள ஐந்து பாடலில் ஒரு பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.  பார்த்திபன் இயக்கும் இந்த புதிய படத்தை பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D.Imman (@immancomposer)

மேலும் படிக்க | வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதை வென்ற நடிகர்கள்!

இயக்குனர் பார்த்திபனும் இந்த படத்தை பகிர்ந்து, " ஸ்ருதியை மீறி, பூங்கொத்தை மீறி, என் நெற்றி காயத்தை கவனித்து விசாரித்தவர்களுக்கு நன்றி! படம் நெத்தியடியா வரனும்னு மண்டைய உடைச்சுகிட்டு யோசிச்சதுல பட்ட காயமதுன்னு ஜாலியா சொல்லாம, பருவோ மருவோ அதை remove செய்ய ஒரு குட்டி surgery! 4 தையல் போட்ட ஒரு தையல்கிட்ட (பெண் டாக்டர்) “நீங்க படிச்சி முடிச்சதும் tailoring-ங்கும் வேறே கத்துகிட்டீங்களா?” என் கேட்க வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே” சும்மாயிருங்க சார் குக்திடப் போறேன். “ என்றார். இப்போதைக்கு ஒரு பாடலின் போதைக்கு ஸ்ருதி ஒரு பாடல்  மட்டும் பாட வந்தார் but பின் என்ன நடந்தது. அது  நாளை…. Good night" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் கடைசியாக 2019 ஆம் ஆண்டு 'கடாரம் கொண்டான்' படத்திற்காக தமிழில் ஒரு பாடலைப் பாடி இருந்தார்.  மேலும் அவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஒரு பாடலை பாடியுள்ளார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கிய லாபம் படத்திற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை.  ஆனாலும் தெலுங்கில் தனது படங்களில் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'சலார்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆக்‌ஷன் த்ரில்லரில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முறையே கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து உள்ளனர்.

மேலும் படிக்க | நவம்பர், டிசம்பரில் அதிக எதிர்பார்ப்பில் வெளியாக இருக்கும் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More