Home> Movies
Advertisement

‘நம்பர் 1’ யாரு? சமந்தாவா, நயன்தாராவா?- திரி கிள்ளிப்போட்ட கரன் ஜோகர்; தீயாய் வெடித்தது சர்ச்சை!

 ‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் நயன்தாரா பற்றி சமந்தாவிடம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது.

‘நம்பர் 1’ யாரு? சமந்தாவா, நயன்தாராவா?- திரி கிள்ளிப்போட்ட கரன் ஜோகர்; தீயாய் வெடித்தது சர்ச்சை!

பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் ‘காபி வித் கரன்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சர்ச்சைக்குப் பெயர்போன இந்நிகழ்ச்சியில், பிரபலங்கள் பலர் பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில், நடிகை சமந்தா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். நாக சைதன்யாவுடனான விவாகரத்து, ஜீவனாம்ச சர்ச்சை உள்ளிட்ட பல கேள்விகளுக்கான சமந்தாவின் பதில்கள் வைரல் ஆகின. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட மற்றொரு  கேள்வி மூலம் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

அதாவது, தென்னிந்தியாவின் பெரிய நடிகையாக தாங்கள் கருதுவது யாரை என சமந்தாவிடம் கரன் ஜோகர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அதற்குப் பதில்கூறும் விதமாக, “நடிகை நயன்தாராவுடன் சமீபத்தில் படம் நடித்தேன்” என காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைச் சுட்டிக்காட்டினார். அதாவது தென் இந்தியாவின் பெரிய நடிகை நயன்தாராதான் எனச் சொல்லும் தொனியில் சமந்தாவின் அந்தப் பதில் அமைந்து இருந்தது.

 

சமந்தாவின் அப்பதிலுக்குக் குறுக்கிட்ட  கரன் ஜோஹர், தான் வைத்துள்ள பட்டியலில் நயன்தாரா இல்லை என்றார். Ormax Media நிறுவனம்  வெளியிட்ட பட்டியலைச் சுட்டிக்காட்டிய கரன் ஜோஹர், இந்தியாவிலேயே சமந்தாதான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | இந்த முறை 'தாதாசாகேப் பால்கே' விருது யாருக்கு? ஏன்? - கோலிவுட் லெஜெண்டுகள் பற்றிய ஓர் அலசல்!

கரன் ஜோஹரின் இந்தப் பதில் சில நயன்தாரா ரசிகர்களைக் கோபமடைய வைத்துள்ளது. கரன் ஜோஹர் வேண்டுமென்றே நயன்தாராவை மட்டம் தட்டுவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதே நேரம் சமந்தா ரசிகர்கள் சிலர், கரன் ஜோஹர் சொல்வது உண்மைதானே எனக் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

அதேபோல, Ormax Mediaவின் பட்டியலைச் சுட்டிக்காட்டியே கரன் ஜோஹர் இவ்வாறு தெரிவித்திருப்பதால் அவரை விமர்சிக்கவேண்டியதில்லை எனவும் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More