Home> Movies
Advertisement

மைனஸ் 15 டிகிரி குளிர்.. பிகினியில் நீரில் இறங்கிய நடிகை - உறைந்து போன ரசிகர்கள்

Rahul Preet Singh Viral Video: நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அந்த வீடியோவில் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

மைனஸ் 15 டிகிரி குளிர்.. பிகினியில் நீரில் இறங்கிய நடிகை - உறைந்து போன ரசிகர்கள்

Rahul Preet Singh Viral Video: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தனது அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களின் மனதை வென்றெடுப்பார். சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷேர் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது மூலைமுடுக்கெல்லாம் வைரலாகி வருகிறது. 

பனி படர்ந்த இடத்தில் கிரையோதெரபி செய்து கொள்ளும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அவரது வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது எனலாம். அவர் இருக்கும் சுற்றுப்புறத்தின் வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடுமையான குளிரிலும், அவர் தண்ணீரில் இருந்து எழுந்து வெளியே வரும்போது  புன்னகைத்தப்படியே வந்தார். 

வலிமையான பெண்மணி

வீடியோவைப் பகிர்ந்த ரகுல் அதில், "கிரையோ இன் -15 (டிகிரி செல்சியஸ்)" என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். பலர் கமெண்டில் அவரைப் பாராட்டியுள்ளனர். கிரையோதெரபி என்பது தசைப்பிடிப்புகள், சருமத்தை மேம்படுத்த என பல்வேறு காரணங்களுக்காக கடும் குளிரில் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

மேலும் படிக்க | நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ!

அதில், ஒருவர், "தண்ணீரில் நெருப்பு" என்று குறிப்பிட்டுல்ளார். "அவள் மிகவும் சூடாக இருக்கிறாள் என்பதற்கான ஆதாரம்..." என்று ஒரு ரசிகர் எழுதியுள்ளார். "இப்போது அந்த தண்ணீரும் வெப்பமாக மாறியிருக்கும்," என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். "வலிமையான பெண்" என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

கலவையான விமர்சனம்

ரகுல் சமீபத்தில் சத்ரிவாலி படத்தில் நடித்தார். படத்தில், அவர் ஆணுறை விற்பனையாளராக நடிக்கிறார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. பாலியல் கல்விக்கு எதிரான சமூகத் தடையை உடைக்க விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றியது படத்தின் முக்கிய கரு. சத்ரிவாலியை தேஜஸ் தியோஸ்கர் இயக்கியுள்ளார், மேலும் சுமீத் வியாஸ், சதீஷ் கௌஷிக், கார்ட் அலுவாலியா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் ZEE5 ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது.

தமிழிலும் பிஸி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' உள்ளிட்ட பல படங்களில் ரகுல் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும், 'இந்தியன் 2' படத்திலும் அவர் நடிக்கிறார். அவர் மேரி பட்னி கா ரீமேக் மற்றும் 31 அக்டோபர் லேடீஸ் நைட் ஆகியவற்றிலும் ஒப்பந்தம் செய்துள்ளார். நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறிய ஜாக்கி பாக்னானி உடனான உறவுக்காக ரகுல் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவார். 

இந்த ஜோடி இப்போது சிறிது காலமாக டேட்டிங் செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் உறவைப் பற்றி அடிக்கடி பேசவில்லை என்றாலும், அவர்கள் சில சந்தர்ப்பங்களில் சமூக வலைதள பதிவுகளில் ஒன்றாக இடம்பெறுவார்கள். பல பொது நிகழ்வுகளிலும் இருவரும் ஒன்றாக காணப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | கங்குவா பட லுக்கில் சூர்யா- லைக்ஸ் அள்ளும் வைரல் ஃபோட்டோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More