Home> Movies
Advertisement

விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா

நடிகை ராதிகா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பாலிவுட் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். 

விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. லீட் ரோலில் காத்ரினா கைஃப் நடித்து வரும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். கிரைம் திரில்லராக உருவாகும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சல்மான் கானை மனதில் வைத்து எழுதிய கதையில், விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது தான் ஹைலைட். சல்மான் கானிடமும் இப்படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது. கதை பிடித்திருந்தாலும், கிரைம் திரில்லர் சப்ஜெக்டெல்லாம் நமக்கு செட் ஆகாது என ஒதுங்கிக் கொண்டாராம்.

மேலும் படிக்க | இல்லாத சீனுக்கு இத்தனை கோடி சம்பளமா? காஜல் அகர்வால் ஹேப்பி

இதன்பிறகே இயக்குநர் விஜய் சேதுபதியை படத்தில் சேர்த்துள்ளார். காத்ரினா கைஃப் ஏற்கனவே தமிழில் நடித்த அனுபவம் இருப்பதால், அவருடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கிறார். கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகை ராதிகா சரத்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் ராதிகா ஆகியோர் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்திலும் ராதிகா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்த அனுபவம் இருப்பதால், மெர்ரி கிறிஸ்துமஸ் கதைக்கும் ஒப்புக்கொண்டாராம். 

fallbacks

விஜய் சேதுபதி படத்தில் இருப்பதால், இரடிப்பு மகிழ்ச்சியாம். நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருந்தார் ராதிகா. தமிழ்ர, தெலுங்கு, கன்னடம் என கொடிக் கட்டிப் பறந்த ராதிகா, சின்னத்திரையிலும் கோலோச்சினார். சன்டிவியில் பெரிய தொடர்களை தயாரித்து நடித்து வெற்றியும் கண்டார். இதனால், வெள்ளித்திரைக்கு விடுப்பு விட்டிருந்தார். அவ்வப்போது மட்டும் சில படங்களில் நடித்தார். அந்த பாணியை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ராதிகா, தனக்கு செட் ஆகும் என நினைக்கும் கதையில் மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். மெர்ரி கிறிஸ்துமஸ் கதை ஓகே ஆனதால் பாலிவுட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க இருக்கிறார். 

மேலும் | சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More