Home> Movies
Advertisement

Thalapathy 67 படத்தில் பீஸ்ட் பட நடிகை... ரசிகர்கள் ஜாலியோ ஜிம்கானா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அடுத்த படத்தில், பீஸ்ட பட நடிகை தேர்வாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Thalapathy 67 படத்தில் பீஸ்ட் பட நடிகை... ரசிகர்கள் ஜாலியோ ஜிம்கானா!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது 'வாரிசு' படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது, அதேபோல வாரிசு படமும் நல்ல வசூல் மழையை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் வரும் பொங்கலுக்கு, விஜய்யின் 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படமும் வெளியாக உள்ளன. 'ஜில்லா' - 'வீரம்' படங்களுக்கு பின், தற்போது இருவரும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட உள்ளனர். தெலுங்கு திரைத்துறையில் எழுந்துள்ள சிறு பிரச்சனையால், வாரிசு திரைப்படம் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகவல் இன்னும் உறுதியாகவில்லை. 

மேலும் படிக்க | துணிவு டீம் போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கிக் கொண்ட வாரிசு! இப்போதைக்கு இதுதான் நிலைமை

'வாரிசு' படத்தை தொடர்ந்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 'தளபதி 67' என அழைக்கப்படும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்படம் படத்தின் பூஜை வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் போடப்படலாம் என்பதால், அதற்குள் நடிகர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

fallbacks

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்திருந்த அபர்ணா தாஸ், தளபதி 67 படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பீஸ்ட்' படத்தில் மத்திய அமைச்சரின் மகளாக நடித்திருந்த அபர்ணா, நகைச்சுவை காட்சிகளிலும் கலக்கியிருந்தார். அபர்ணா, விஜய், பூஜா ஹெக்டே காட்சிகள் திரையரங்களில் அதிகம் ரசிகப்பட்ட காட்சிகளில் ஒன்று. 

மேலும், 'பீஸ்ட்' படத்தில் விஜய் பாடியிருந்த ஜாலியோ ஜிம்கானா பாட்டில், அபர்ணா நடனமாடியதும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த பாட்டின் ப்ரோமோவில் விஜய்க்கு அடுத்து அதிகம் பேசப்பட்டது அபர்ணாதான். எனவே, விஜய் - அபர்ணா காட்சிகள் நன்றாக அமைந்ததால், இந்த படத்திலும் அபர்ணா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparna Das (@aparna.das1)

மலையாளத்திலும் சில படங்களில் தோன்றியுள்ள அபர்ணா, நடிகர் கவின் உடன் 'தாதா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | ஜாலியோ ஜிம்கானா அபர்ணா தாஸ் புகைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More