Home> Movies
Advertisement

Alia Bhatt girl baby : பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா பட்!

Alia Bhatt baby : பிரபல பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணையருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  

Alia Bhatt girl baby : பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா பட்!

Alia Bhatt baby : கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்ட, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணையருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில், ஆலியா பட் இன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இணையத்தில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஆலியா பட் குழந்தை பிறப்பு குறித்து அவரது இன்ஸ்டாகிராமில்,"எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்தி இதோ... எங்கள் குழந்தை வந்துவிட்டது. மந்திர பெண் குழந்தை அவள்... நாங்கள் அன்பு மிகுந்த பெற்றோர்களாகிவிட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல், ஆலியா, ரன்பீர் ஆகிய இருவரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.   

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சமீபத்தில், ஆலியா பட்டிற்கு வளைகாப்பு நிகழ்வு மும்பையில் உள்ள அவரது வீட்டில் எளிய முறையில் நடந்தது. நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஆலியோ பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் படிக்க | வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா பட் - குழந்தை பிறக்கும் தேதி எப்போது தெரியுமா?

ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி இந்தாண்டு ஏப்.14ஆம் தேதி திருமணம் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆலியா பட் தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். 

ரன்பீர் - ஆலியா, சமீபத்தில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படத்தில்தான், முதல்முறையாக ஜோடியாக நடித்திருந்தனர். அதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு வெளியான 'ஏ தில் ஹை முஷ்கில்' ரன்பீருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். அதில், ஆலியா வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | முன்னாள் மனைவியை தேடி சென்ற நடிகர்; விரைவில் குட் நியூஸ் ஆ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More