Home> Movies
Advertisement

நான் பான் மசாலா ஹீரோ இல்லை பான் இந்தியா ஹீரோ - மாஸ் காட்டிய யஷ்

நடிகர் யஷ் பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

நான் பான் மசாலா ஹீரோ இல்லை பான் இந்தியா ஹீரோ - மாஸ் காட்டிய யஷ்

யஷ் நடித்த பான் இந்தியா படமான கேஜிஎஃப் 2 பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படம் 1000 கோடி ரூபாயையும் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி பான் இந்தியா படம் குறித்த விவாதத்தையும் இப்படமானது எழுப்பியிருக்கிறது. இந்தச் சூழலில் நடிகர் யஷ் பான் மசாலா விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகர் யஷ்ஷின் ஒப்புதல்களை நிர்வகிக்கும் டேலண்ட் மேனேஜ்மெண்ட் ஏஜென்சியின் த்லாஇமை அதிகாரி அர்ஜுன் பானர்ஜி கூறுகையில், “யஷ் மற்றும் அவருடைய நீண்டகால நண்பர் பிரசாந்த்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு இணைந்தோம். 

மேலும் படிக்க | நீ மிகவும் அழகாக இருக்க ஸ்ருதி! அழகை ஆராதிக்கும் ரசிகர்கள்

எங்களுக்குள் தொடர்புகொள்ள ‘Storm Is Coming' என்ற பெயரில் க்ரூப் உருக்கினோம். கேஜிஎஃப் 2 இவ்வளவு பெரிய வெற்றியடையும் என நாங்கள் நினைக்கவில்லை.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு யஷ்ஷிற்கு கிடைத்தது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். யாருடன் வேலை செய்ய வேண்டுமென்பதில் எங்களுக்கு கவனம் இருக்கிறது” என்றார்.

மேலும் படிக்க | 1000 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தது கேஜிஎஃப் 2

இதற்கிடையே கேஜிஎஃப் 2 படத்தை அடிப்படையாக வைத்து கிச்சா சுதீப்புக்கும், அஜய் தேவ்கனுக்கும் ட்விட்டரில் கருத்து பரிமாற்றம் நடந்தது. அது இந்தி Vs தென்னிந்திய மொழிகள் என்ற தளத்துக்கு சென்றது.

அந்த சர்ச்சையை கிளப்பிய அஜய் தேவ்கன் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இதன் மூலம் தான் ஒரு பான் இந்தியா ஹீரோ பான் மசாலா ஹீரோ இல்லை என்பதை ராக்கி பாய் உணர்த்திவிட்டார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More