Home> Movies
Advertisement

புதிய சாதனை படைத்த விஜய்! இதிலும் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய தளபதி..

நடிகர் விஜய், புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குதூகலத்தில் குதித்து வருகின்றனர்.   

புதிய சாதனை படைத்த விஜய்! இதிலும் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய தளபதி..

ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என்று அழைக்கப்படுபவர், நடிகர் விஜய். தென்னிந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிப்பது, வெளியீட்டிற்கு முன்பே உறுதியாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. சினிமா மட்டுமன்றி, வேறு ஒரு விஷயத்திலும் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பின்தொடர்பாளர்கள்..

திரையுலகில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் சமூக வலைதளங்களிடமிருந்து தள்ளியிருப்பது வழக்கம். நடிகர் விஜய்யும் அப்படித்தான் பெரிதாக எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு தொடங்காமல் இருந்தார். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் தனக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார். 

fallbacks

கணக்கை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே இவருக்கு பல மில்லியன் ஃபாலோவர்ஸ் குவிந்தனர். தற்போது, இன்ஸ்டாகிராமில் இவருக்கு 10 மில்லியன் ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய தளபதி..

தமிழ் திரையுலகை பொறுத்தவரை அனைத்து தலைமுறைகளிலும் ஒரு நடிகருக்கு இன்னொரு நடிகர் போட்டியாக இருப்பார். அப்படி, நடிகர் ரஜினிக்கு போட்டியாக பல நாட்களாக அனைவரும் கமல்ஹாசனை கூறி வந்தனர். விஜய்-அஜித் ஆகியோரையும் ஒப்பிட்டு அவர்களின் ரசிக்கள் சண்டை போட்டு வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. தற்போது ரஜினியுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் ரஜினியும் கடந்த 2018ஆம் ஆண்டு இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கினார். அப்போது ஒரே ஒர போஸ்டை வெளியிட்ட அவர், அதன் பிறகு இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இல்லை. இந்த நிலையில், அவருக்கு இதுவரை 1.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கின்றனர். அனைத்து விஷயங்களிலும் விஜய்யை ரஜினியுடன் ஒப்பிட்டு வரும் ரசிகர்கள், இதிலும் அப்படியே செய்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

காக்கா-கழுகு என்றால் என்ன? 

பல நாட்களாக, ரஜினி-விஜய்யை மீம் கிரியேட்டர்கள் ‘காக்கா-கழுகு’ என குறிப்பிடுவதுண்டு. ஜெயிலர் பட விழாவில் காக்கா கழுகை வைத்து ரஜினி கூறிய கதையே இதற்கு காரணம். இவர், “காக்கா” என மறைமுகமாக விஜய்யை தாக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து லியோ படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. இதில், நடிகர் விஜய்யும் காக்கா கழுகு என பேசினார். இதிலிருந்து ரசிகர்கள் இவர்களின் இந்த மறைமுகமான கலாய்களை தங்களுக்கு கண்டன்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். விஜய் படம் வெளியாகும் போது, ரஜினி ரசிகர்கள் நெகடிவாக விமர்சனங்கள் கொடுப்பதும், ரஜினி படம் வெளியாகும் போது ரஜினி ரசிகர்கள் படம் குறித்து தரக்குறைவாக பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது. 

விஜய்-ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்..

நடிகர் விஜய், தற்போது தனது 69வது படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் லைலா, சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து ரஜினி இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இவரது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இதில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ரானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படங்களின் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. 

மேலும் படிக்க | 2023-ல் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள்! உங்களுக்கு பிடித்தது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More