Home> Movies
Advertisement

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: நடிகர் விஜய்யின் தந்தை அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: நடிகர் விஜய்யின் தந்தை அறிவிப்பு

சென்னை: தனது பெயரை பயன்படுத்தி தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் (Vijay Makkal Iyakkam) என்கிற கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராகத் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதேசமயத்தில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த நடிகர் விஜய், தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை எனக்கூறியதோடு, தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்கக்கூறி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணையைச் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ALSO READ | தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது, அப்பொழுது, நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாகவும், அதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கு வரும் அக்டோபர் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்காக கட்சி தொடங்கப்பட்டது என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் ஒரு அரசியல் கட்சியை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் தான் நடிகரின் ஆரம்ப காலத்தில் விஜய்க்கு ரசிகர் மன்றங்களைத் தொடங்கியவர் என்றும் அந்த நேரத்திலும் அவரிடம் அனுமதி கோரவில்லை என்றும் கூறினார். கட்சி ஆரம்பித்து தனது சொந்த முயற்சி என்றும், இதற்கும் விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

ALSO READ | அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை

பின்னர், தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய்யின் தாயார் ஷோபா, தனது கணவர் தனது மகனுக்கு தெரியாமல் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய முயன்றதாக கூறினார். அவர் ஒரு சங்கத்தைத் தொடங்குவதாகக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கியதாக விஜய்யின் தாயார் தெரிவித்திருந்தார். தனது கணவர் அரசியல் கட்சி தொடங்குகிறார் என அறிந்த பிறகு, மேலும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திட தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார். எனக்கும் அரசியல் கட்சி தொடங்கியதற்கும் எந்த சம்மதமும் இல்லை. அரசியல் பிரவேசம் குறித்து விஜய் மட்டுமே முடிவு செய்வார் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More