Home> Movies
Advertisement

மீண்டும் ஓர் ஏழாம் அறிவு! கலக்கப்போகும் நடிகர் சூர்யா?

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா அறிவியல் சம்மந்தமான கதைக்களத்தை கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  

மீண்டும் ஓர் ஏழாம் அறிவு! கலக்கப்போகும் நடிகர் சூர்யா?

சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இவரது படங்கள் அனைத்தும் ஆழ்ந்த சமூக கருத்துக்களை மையமாக வைத்து வெளிவருகிறது.  நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இவர் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார், அதோடு நிஜ வாழ்விலும் ஹீரோ போல பல நன்மைகளையும் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து தெள்ளத்தெளிவாக மக்களுக்கு காட்டியது, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தியது.

fallbacks

மேலும் படிக்க | இரண்டு பிலாப் படங்களில் இருந்து தப்பித்த சூப்பர் ஸ்டார்!

தற்போது ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா அறிவியல் சம்மந்தப்பட்ட கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  இன்று நேற்று நாளை என்கிற அறிவியல் புனைகதை படம் மூலம் வரவேற்பை பெற்ற இந்த இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி வருகிறார்.  அயலான் படமும் அறிவியல் ஆச்சர்யம் நிறைந்த கதையம்சத்துடன் உருவாகி வருகிறது.  சூர்யா-ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை, மேலும் இந்த பெயரிடப்படாத படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

fallbacks

ஏற்கனவே நடிகர் சூர்யா 'ஏழாம் அறிவு', '24' போன்ற அறிவியல் கதையம்சம் நிறைந்த படத்தில் நடித்திருந்தார், இந்த படம் சிறந்த வரவேற்பை பெற்றது.  அதேபோல இப்படமும் உருவானால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், வரவேற்பும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' மற்றும் பாலா இயக்கும் படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  மேலும் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் அறிவியல் கதையம்சம் நிறைந்த இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More