Home> Movies
Advertisement

சிம்பு திருமணம் எப்போது? எதிர்பார்க்கும் ரசிகர்கள்

நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்வது எப்போது? என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

சிம்பு திருமணம் எப்போது? எதிர்பார்க்கும் ரசிகர்கள்

வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமான சிம்பு அடுத்தடுத்து கொடுத்த ஹிட் படங்களால் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ எனப் பெயரெடுத்தார். வசூலிலிலும் பாக்ஸ் ஆஃபீஸ் நாயகனாக உயர்ந்ததால் 2 ஆயிரத்தின் பிற்பகுதியில் வரிசையாக படங்களில் கமிட்டானார். அவர் கிடைத்த புகழ் வெளிச்சம்போல் மற்ற இளம் நடிகர்களுக்கு கிடைக்க வில்லை என்றே சொல்லலாம். அவருடைய ஸ்டைல், நடனம் உள்ளிட்டவை இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்பட்ட சிம்புக்கு, திடீரென போதாக்காலம் தொடங்கியது. படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், முன்னணி நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் பெயர் அடிபடத் தொடங்கியது. 

மேலும் படிக்க | ஒரு கணம் ஒருபோதும் பிரியக்கூடாதே என் உயிரே.... திருமண கோலத்தில் நயன் - விக்னேஷ் சிவன்

இதனால், திரைத்துறையில் அவரின் பெயர் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. சிம்புவும் ஒரு கட்டத்தில் படங்கள் நடிப்பதை நிறுத்தினார். தயாரிப்பாளர்களுடனான பிரச்சனை காரணமாக ரெட் கார்டும் சிம்புவுக்கு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில், சிம்புவின் திரை வாழ்க்கை முடிந்துவிட்டது என்றெல்லாம் கூட தகவல்கள் பரவின. ஆனால் சிம்பு இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதுகூட சிம்புவின் திருமணம் குறித்த பேச்சுகள் ஓய்ந்திருக்கவில்லை. வயதாகிக் கொண்டே சென்றதால் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நல்ல வரன் அமைந்தால் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.

fallbacks

அன்றுமுதல் சிம்புவின் திருமணம் குறித்த யூகங்கள் அவ்வப்போது கிளம்பிக் கொண்டே இருக்கும். அண்மையில் அவருடைய மாநாடு படம் வெற்றி பெற்றதும் அவரின் திருமணம் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியது. ஆனால், இந்த யூகங்களை கண்டுகொள்ளாத சிம்பு, மாநாடு வெற்றி மூலம் வெள்ளித்திரையில் கிடைத்துள்ள ஸ்டார் அந்தஸ்தை தக்க வைக்க முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் பணிகள் தான் இப்போது விரைவாக சென்று கொண்டிருக்கின்றன. அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் அவருடைய திருமண பேச்சுகளை நெட்டிசன்கள் இணையத்தில் கொளுத்திபோட்டுள்ளனர். 

மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More