Home> Movies
Advertisement

அண்ணன் சிம்பு-க்கு முன் மணவாழ்வில் இணையும் தம்பி குறளரசன்!

இயக்குநர் டி ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் குறளரசனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

அண்ணன் சிம்பு-க்கு முன் மணவாழ்வில் இணையும் தம்பி குறளரசன்!

இயக்குநர் டி ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் குறளரசனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குநர் டி ராஜேந்திரன் அவர்களின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26-ஆம் நாள் சென்னையில் திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இஸ்லாமிய பெண் ஒருரை குரளரசன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இந்த விவகாரம் குறளரசன் காதல் திருமணம் குறித்த வதந்திகளுக்கு எண்ணெய் ஊற்றியது.

இந்த நிலையில், இதுகுறித்து குறளரசன் தெரிவிக்கையில்,... "ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது எனவும் தெரிவித்தார்.

சொன்னால் தான் காதலா திரைப்படத்தில் "நான் பிள்ளை இல்லை, தொல்லை" என கூறி பார்பவர்களை கண்கலங்கள் வைத்த குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More