Home> Movies
Advertisement

காதலில் விழுந்த நடிகர் சித்தார்த்... இந்த முறை யார் தெரியுமா?

நடிகர் சித்தார்த் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும், அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 காதலில் விழுந்த நடிகர் சித்தார்த்... இந்த முறை யார் தெரியுமா?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். நடிகராக மட்டுமின்றி மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த சித்தார்த் தமிழின் கவனிக்கத்தக்க நடிகர் ஆனார். தமிழ் மட்டுமின்றி டோலிவுட்,பாலிவுட்டிலும் நடித்திருக்கிறார் அவர். நடிப்பது மட்டுமல்லாமல் பொது வெளிகளில் தனது கருத்தை யாருக்கும் பயப்படாமல் கூறும் சித்தார்த் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரேநேரத்திலும் சந்தித்திருக்கிறார். சமந்தா விவாகரத்து ஆன சமயத்தில்கூட சித்தார்த் பதிவிட்ட ட்வீட் ஒன்று பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. 

இந்தச் சூழலில் திரையுலகத்திலிருந்து விலகப்ப்போவதாக சித்தார்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் சமந்தாவுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் பல வெளிநாடுகளுக்கு ஒன்றாக சென்றுவந்த சூழலில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவர்களது காதலை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியானது.

fallbacks

இந்நிலையில் சித்தார்த் தற்போது மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அவர் அதிதி ராவை காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த ஆண்டு வெளியான மகா சமுத்திரம் படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தி இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி காதலில் வந்து நிற்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் ப்யூட்டி பார்லரில் இருந்து வெளியே வந்த அதிதி, அங்கு வந்த சித்தார்த்துடன் ஒன்றாக சென்றதாகவும், அந்த சமயத்தில் அவர்களை புகைப்படம் எடுக்க முயன்றவர்கள் மீது கோபப்பட்ட சித்தார்த், விரைவில் இதுகுறித்து நானே கூறுகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது.

 

அதிதி ராவ் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி ராவ், ஜெயில் படத்தில் காத்தோடு காத்தானேன் பாடலையும் பாடியிருக்கிறார்.

மேலும் படிக்க | அருள்நிதி நடித்த தேஜாவு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More