Home> Movies
Advertisement

பழைய பாமிற்கு வந்த நானி! அதிரடியில் மிரட்டும் தசரா டீசர்!

இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் "தசரா" படத்தின்  ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர்.  

பழைய பாமிற்கு வந்த நானி! அதிரடியில் மிரட்டும் தசரா டீசர்!

உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் "தசரா" அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை,  இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர்,  துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.  இந்த கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது தசரா டிரெய்லர்.

மேலும் படிக்க | ’எனக்கு பல உருவ கேலிகள் நடந்திருக்கு’ பொம்மை நாயகி புரோமோஷனில் யோகிபாபு எமோஷ்னல்

நடிகர்களின் முழுமையான மாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை,  அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களைக் காட்டுவது என, தசரா  டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முதல் பிரேமில் தரணி (நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது  காட்டப்படுகிறது. தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதை.  சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க  மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது.

fallbacks

இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல,  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு.  இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம் ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி  கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறது.  டீஸர் உண்மையில் ஒரு புதிய உலகைக் காட்டுகிறது.  நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம்,  பேச்சு, பாவனை, உடல்மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நானி கத்தியின் குறுக்கே விரலை வைத்து நெற்றியில் ரத்தம் பூசுவது அவரது கலக மனப்பான்மையைக் காட்டுகிறது.  ஷைன் டாம் சாக்கோவும் சாய் குமாரும் நெகட்டிவ் வேடங்களில் தோன்றியுள்ளனர்.  

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ISC யின் தலைசிறந்த ஒளிப்பதிவில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தின் நிலத்திற்குள் நாமே நுழைந்தது போல் உள்ளது.  ரகிதா ரகிதாவின் ஒலி அமைப்புடன், சந்தோஷ் நாராயணனின் துடிப்பான பின்னணி இசை காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது. எடிட்டர் நவின் நூலி உடைய டீஸர் கட் சிறப்பாக உள்ளது.  SLV சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பு நம்மை மிரளச் செய்கிறது. படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா, நிர்வாக தயாரிப்பாளராக விஜய் சாகந்தி பணியாற்றுகின்றனர்.  இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்துகிறது.  “தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

மேலும் படிக்க | விஜய்க்கு அம்மாவை விட அப்பாவை தான் பிடிக்கும் - மனம் திறந்த S.A.சந்திரசேகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More