Home> Movies
Advertisement

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷ் முரளியை பார்த்து இருக்கிறீர்களா? நேசிப்பாயா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்".

மேலும் படிக்க | ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?

இணைத்தயாரிப்பாளர் சிநேகா, “நிகழ்வுக்கு வந்திருக்கும் நயன்தாரா மேம்க்கு நன்றி.  இந்த வாய்ப்பு கொடுத்த அப்பாவுக்கும் இப்படியான ஒரு ஸ்டைலிஷ் படத்தை எனக்கும் ஆகாஷூக்கும் கொடுத்த விஷ்ணு சாருக்கும் நன்றி. எல்லோரும் ஆகாஷை அன்போடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். நயன்தாரா பேசுகையில், " நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும்.  மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

ஆகாஷ் முரளி, "இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி" என்று தெரிவித்தார். நடிகர் ஆர்யா, “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.

நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி” என்றார். இயக்குநர் விஷ்ணு வர்தன், “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

அதர்வா முரளி பேசும் போது, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க | 9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More