Home> Movies
Advertisement

19 லட்சம் பேர் பார்த்த விவேகம் டீசர்!

19 லட்சம் பேர் பார்த்த விவேகம் டீசர்!

'தல' அஜீத்தின் 'விவேகம்' திரைப்பட டீசர் அதிகாரப்பூர்வமாக இன்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட 9 மணி நேரத்தில் சுமார் 19 லட்சம் பேர் விவேகம் படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விவேகம். கடந்த பிப்ரவர் 2-ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தனர் படக்குழு.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று (மே 11-ம் தேதி) 12.01 மணிக்கு விவேகம் படத்தின் டீசர் வெளியானது.

சிறுத்தை சிவா -‘தல’ அஜித் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படமான ” விவேகம்” படத்தின் டீசர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்பட்டது. 

விவேகம் டீசரை ரசிகர்கள் பலரும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இவ்வாறு நடந்திருக்காவிட்டால் , யுடியூபில் விவேகம் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.

Read More