Home> Lifestyle
Advertisement

Zomato Instant: இனி 10 நிமிடங்களில் உணவை டெலிவரி; அசத்தும் Zomato

Zomato இன்ஸ்டன்ட் மூலம் இனி அரை மணி நேரத்திற்குப் பதிலாக வெறும் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும். 

Zomato Instant: இனி 10 நிமிடங்களில் உணவை டெலிவரி; அசத்தும் Zomato

ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான Zomato வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி உணவு வெறும் 10 நிமிடங்களில் வாடிக்கையாளரை சென்றடையும் என்று Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். இது குறித்த தகவலை அவர் வலைப்பதிவு மூலம் தெரிவித்தார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் தீபிந்தர் கோயல் கூறினார்.

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல், 10 நிமிடங்களில் Zomato மூலம் உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று ட்வீட் செய்துள்ளார். இதில் உணவின் தரம் – 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு – 10/10 மற்றும் டெலிவரி நேரம் – 10 நிமிடங்கள் என அவர் கூறியுள்ளார்

Zomato செயலியில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சம்

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை மிக விரைவாக வந்து சேர வேண்டும் என விரும்புகிறார்கள் என்று தீபிந்தர் கோயல் தனது வலைப்பதிவில் எழுதினார். அவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. மிகக் குறைந்த டெலிவரி நேரத்திற்கு ஏற்ப உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது Zomato செயலியில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Zomato செயலியின் சராசரி டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பது மிகவும் தாமதமான நேரமாக கருதப்படுவதால், அதனை குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என்றும் அவர் மேலும் எழுதினார். சராசரி டெலிவரி நேரத்தை நாம் குறைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | Jio - Vi - Airtel: ₹299 பிரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது எது?

இன்றைய தொழில்நுட்பத் துறையில் நிலைத்திருக்க, புதுமைகளை அறிமுகப்படுத்துவது, தொடர்ந்து முன்னேறுவதும் முக்கியம் என அவர் கூறினார். அதனால்தான் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய Zomato இன்ஸ்டன்ட் கொண்டு வருகிறோம்.

தீபிந்தர் கோயல் கூறுகையில், விரைவான உணவு விநியோகத்தின் வாக்குறுதியானது, தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஃபினிஷிங் ஸ்டேஷன்களின் நெட்வொர்க்கைப் பொறுத்தது. இதற்காக டெலிவரி செய்யும் நபர் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது எனவும் அவர் உறுதி படுத்தினார்.

மேலும் படிக்க | ரூ.16,000 மதிப்பிலான Realme ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்குவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More