Home> Lifestyle
Advertisement

இப்போது 40 வயதிலேயே ₹50,000 வரை பென்ஷன் தரும் அசத்தலான LIC திட்டம்

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சரல் பென்ஷன் யோஜனா என்ற இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதில் அல்ல,  40 வயதில் இருந்தே  ஓய்வூதியம் பெறலாம். 

இப்போது 40 வயதிலேயே ₹50,000 வரை பென்ஷன் தரும் அசத்தலான LIC திட்டம்

புதுடெல்லி: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சரல் பென்ஷன் யோஜனா என்ற இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதில் அல்ல,  40 வயதில் இருந்தே  ஓய்வூதியம் பெறலாம். 

சரல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

எல்ஐசியின் இந்தத் திட்டத்தின் பெயர் சரல் பென்ஷன் யோஜனா. இது ஒரு பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் போது மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்து விட்டால் நாமினிக்கு சிங்கிள் பிரீமியத்தின் தொகை திருப்பி அளிக்கப்படும். சரல் பென்ஷன் யோஜனா என்பது உடனடி வருடாந்திரத் திட்டமாகும், அதாவது பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியம் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

ஓய்வூதிய திட்டத்த்தில் சேருவதற்கான இரண்டு வழிகள்

சிங்கிள் லைப் (Single Life)- இதில், பாலிசி யாருடைய பெயரிலும் இருக்கிறதோ, அவர் உயிருடன் இருக்கும் வரை,  தொடர்ந்து வாழ்நால் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறுவார். அவர் இறந்த பிறகு அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும்.

ALSO READ | உங்கள் வியாபாரம் செழிக்க மிக எளிய ‘5’ ஜோதிட பரிகாரங்கள்..!

ஜாயிண்ட் லைப் (Joint Life) - இதில், கணவன், மனைவி இருவருக்கும் கவரேஜ் உள்ளது. முதன்மை ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் வரை, தொடர்ந்து ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். அவர் இறந்த பிறகு, அவரது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். மனைவில் இறந்த பிறகு அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்படும்.

சரல் பென்ஷன் யோஜனாவில் இணைவதற்கான தகுதி

இத்திட்டத்தின் பயன் பெற குறைந்தபட்ச வயது வரம்பு 40 வயது, அதிகபட்சம் 80 வயது. இது முழுமையாக ஆயுள் காப்பீடு என்பதால், ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். சாரல் பென்ஷன் பாலிசியை தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும்  அதனை சரண்டர் செய்யலாம்.

ALSO READ | தீபாவளி ஆன்லைன் ஷாப்பிங்: மோசடியில் இருந்து தப்பிக்க 10 டிப்ஸ்..!

ஓய்வூதியம் எப்போது  வேண்டும்,  என்பதை ஓய்வூதியம் பெறுபவர் முடிவு செய்யலாம். இதில் உங்களுக்கு 4 ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம் அல்லது 12 மாதங்களில் ஒரு முறை என ஓய்வூதியம் பெறலாம். 

உங்களுக்கு 40 வயதாகி, 10 லட்சம் ரூபாய் பிரீமியமாக டெபாசிட் செய்திருந்தால், நீங்கள் ஆண்டுக்கு 50250 ரூபாய் பென்ஷன் கிடைக்கும், அது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இது தவிர, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்பப் பெற விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில் 5 சதவீதத்தை கழித்து கொண்டு, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெறலாம்.

கடன் வசதி

உங்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் சாரல் பென்ஷன் யோஜனாவில் டெபாசிட் செய்த பணத்தை திரும்பப் பெறலாம். அதற்காக நீங்கள் பணத்தை எடுக்கலாம். பாலிசியை ஒப்படைத்தால், அடிப்படை பாலிஸியில் 95% திரும்பப் பெறப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் (saral pension plan) கடன் பெறுவதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

ALSO READ: இந்த ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருந்தா, ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More