Home> Lifestyle
Advertisement

பண மழை பொழியச் செய்யும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் ஹிட் திட்டங்கள்..!!

Post Office Saving Schemes: தபால் அலுவலகம்  வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பாகிறதும் மேலும், அரசின் உத்தரவாதம் உள்ளதால் பாதுகாப்பானதும் கூட.

பண மழை பொழியச் செய்யும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் ஹிட் திட்டங்கள்..!!

Post Office Saving Schemes: அஞ்சலகத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உங்கள் முதலீடு, நல்ல வருமானத்தை கொடுக்க வேண்டும் என்பதோடு, பாதுகாப்பாகவும் இருக்க விரும்பினால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தபால் அலுவலக திட்டங்களில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்கள் பணம் மிக பாதுகாப்பாக இருக்கும். செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.  அதனால் உங்கள் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். தபால் அலுவலகத்தின் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால், விரைவில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

1.  போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

1 வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை தபால் அலுவலக டைம் டெபாசிட்  திட்டத்திற்கு (TD) 5.5%வட்டி கிடைக்கும். நீங்கள் இதில் முதலீடு செய்தால், உங்கள் பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதேபோல், 5 வருட கால வைப்புத்தொகைக்கு 6.7% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டால், உங்கள் பணம் சுமார் 10.75 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

2. தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு ( Post Office Savings Bank Account)

நீங்கள் உங்கள் பணத்தை ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் போட்டால், பணம் இரட்டிப்பாவதற்கு நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் அது ஆண்டுக்கு 4.0 சதவிகிதம் மட்டுமே வட்டி அளிக்கிறது, அதாவது, உங்கள் பணம் 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

3. போஸ்ட் ஆபீஸ் ரெகரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit )

தற்போது, ​​தபால் அலுவலகத்தின் ரெகரிங் டெபாசிட் திட்டத்திற்கு (RD) 5.8% வட்டி வழங்கப்படுகிறது, எனவே இந்த வட்டி விகிதத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

4. அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டம் ( Post Office Monthly Income Scheme)

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (MIS) தற்போது 6.6% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதத்தில் பணம் முதலீடு செய்தால், அது சுமார் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

5. அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Post Office Senior Citizens Savings Scheme)

தபால் நிலைய (Post Office) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உங்கள் பணம் சுமார் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

6. தபால் அலுவலக PPF (Post Office PPF)

தபால் அலுவலகத்தின் 15 வருட பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) தற்போது 7.1% வட்டி கிடைக்கிறது. அதாவது, இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 10.14 ஆண்டுகள் ஆகும்.

7. தபால் அலுவலக சுகன்யா சம்ரித்தி கணக்கு (Post Office Sukanya Samriddhi Account )

தபால் அலுவலகத்தின் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டத்தில், தற்போது 7.6%  என்ற அளவில் அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. சிறுமிகளுக்கான இத்திட்டத்தில், பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 9.47 ஆண்டுகள் ஆகும்.

ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்

8. தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ் (Post Office National Saving Certificate) 

தற்போது, ​​தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இது 5 வருட சேமிப்புத் திட்டமாகும், இதில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியையும் சேமிக்க முடியும். இந்த வட்டி விகிதத்தில் பணத்தை முதலீடு செய்தால், அது சுமார் 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Read More