Home> Lifestyle
Advertisement

ஏடிஎம் கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது?

தற்போது ஒரு சில நாடுகள் மட்டுமே 4 இலக்க PIN எங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.  

ஏடிஎம் கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது?

ஏடிஎம் கார்டுகள் வைத்திருக்காதவறர்களை  இப்போது காணமுடியாது, அனைவரும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டிய நிலை ஏற்படாமல் இருப்பதால், இது பயன்படுத்துவதற்கு எளிதானதாக பார்க்கப்படுகிறது.  நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டுகளில் 4 இலக்க பின் (PIN) எண் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்தது.  ஆனால் ஏன் வெறும் 4 எண்கள் மட்டும் உள்ளது என்பதை சிந்தித்து இருப்போமா? இந்த 4 இலக்க ரகசிய எண்ணிற்கு பின்னல் சுவாரஸ்யமா கதை கூறப்படுகிறது.

fallbacks

மேலும் படிக்க | ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ

1969-ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜான் அட்ரியன் ஷெப்பர்ட் பாரன் என்பவர் தான் ஏடிஎம் எனப்படும் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷினை கண்டுபிடித்தார்.  இந்த இயந்திரத்தை இவர் முதன்முதலாக வடிவமைத்தபோது 6 இலக்க எண்களை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து அதன்படியே செய்தார்.  இந்த ஏடிஎம் கார்டை அவர் தனது மனைவியிடம் பயன்படுத்த கொடுத்தார், ஆனால் அவரது மனைவியால் முழுமையாக 6 இலக்க எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.  ஒவ்வொரு தடவை அந்த கார்டை பயன்படுத்தும்போதும் அவருக்கு வெறும் 4 எண்கள் மட்டுமே நினைவில் இருந்துள்ளது, மீதி இரண்டு எண்களை அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.

fallbacks

இதனை கவனித்த ஜான் மனிதர்களால் 4 எண்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார்.  அதனையடுத்து அவர் ஏடிஎம் கார்டில் 4 இலக்கங்களை மட்டும் அமைக்க முடிவு செய்தார்.  ஜான் முதலில் வைத்திருந்த 6 இலக்க எண் பாதுக்காப்பானதாக இருந்தது, இந்த 4 இலக்க எண்களானது 0000 முதல் 9999 வரை தான் இருக்கும்.  இவற்றை வைத்து கிட்டத்தட்ட 10,000 ரகசிய இலக்க எண்களை உருவாக்கலாம், இதில் 20% ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.  இந்த 4 இலக்க எண்கள் பாதுகாப்பில்லை என்றாலும், 6 இலக்க எண்களுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.  இருப்பினும் பல நாடுகளில் இந்த 6 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது இந்தியாவிலும் சில வங்கிகள் 6 இலக்க எங்களையே வழங்குகின்றன.  

மேலும் படிக்க | கூகுளில் இந்த விஷயங்கள் எல்லாம் ட்ரை பண்ணி இருக்கீங்களா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More