Home> Lifestyle
Advertisement

செம்பு பாத்திரத்தில் இவர்களெல்லாம் தண்ணீர் குடிக்கவே கூடாது - ஏன் தெரியுமா?

Drinking water : செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என கூறப்பட்டாலும், ஒருசிலர் அந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கவே கூடாது.   

செம்பு பாத்திரத்தில் இவர்களெல்லாம் தண்ணீர் குடிக்கவே கூடாது - ஏன் தெரியுமா?

Drinking water Tips :பல நூற்றாண்டுகளாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆடம்பரத்தின் அடையாளமாகவும் இது இருந்த நிலையில், ஆயுர்வேதத்தின்படி செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியதுக்கு மிகவும் நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள், வாத, பித்தம் எல்லாம் வராது. அத்துடன் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ரத்த சிவப்பணுகள் உருவாக உதவும் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் சிலருக்கு செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. யார் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கக்கூடாது, அதனால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

காப்பர் ஜார்ஜ் தண்ணீர்

ஒரு செப்புப் பாத்திரம், பாட்டில் அல்லது குடத்தில் தண்ணீர் நிரப்பி எட்டு மணி நேரம் விட்டு, மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் குடித்தால், இந்த செயல்முறை ஒலிகோடைனமிக் விளைவு என்று அழைக்கப்படுகிறது. தாமிரத்தின் பண்புகள் தண்ணீரில் கலக்கப்படுவதால் இவ்வாறு சொல்லப்படுகிறது. இந்த நீர் தாமிர நீர் அல்லது காப்பர் சார்ஜ் செய்யப்பட்ட நீர் என்று அழைக்கப்படுகிறது. தாமிரம் தண்ணீரில் இருக்கும் பல வகையான பாக்டீரியாக்களை நீக்கி அதை தூய்மையாக்குகிறது. இருப்பினும், பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கும் செம்பு தண்ணீரை எப்போதும் குடிக்காமல் இருப்பது நல்லது.

செப்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

தாமிர நச்சுத்தன்மை -

நாள் முழுவதும் செப்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை குடித்து வந்தால், உங்கள் உடலில் தாமிர நச்சுத்தன்மை ஏற்படலாம். உடலில் தாமிரத்தின் அளவு அதிகரிப்பால், கடுமையான குமட்டல், தலைச்சுற்றல், வயிற்று வலி உண்டாக வாய்ப்பு இருக்கிறது. காலப்போக்கில் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவையும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | ஓர் இரவில் உடல் எடையை குறைக்க என்ன பயிற்சி செய்யலாம்?

வில்சன் நோய் -

உடலில் அதிகப்படியான தாமிரம் இருப்பது ஒரு நபருக்கு வில்சன் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையில், தாமிரம் கண்கள், கல்லீரல், மூளை மற்றும் உடலின் பல பகுதிகளில் படிகிறது. இது ஆபத்தானது. எனவே இப்பிரச்சனை வராமல் இருக்க செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கும் தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அமிலத்தன்மை-

செம்பு பாத்திரத்தில் பல மணி நேரம் தண்ணீர் சேமித்து வைத்தால் அது சூடாகும். இதன் காரணமாக ஒருவருக்கு அமிலத்தன்மை பிரச்சனை உண்டாகலாம். உங்களுக்கு ஏற்கனவே அமிலத்தன்மையால் தொந்தரவு இருந்தால், செப்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.

சிறுநீரக நோயாளி -

அதிகப்படியான செம்பு தண்ணீரைக் குடிப்பது சிறுநீரக நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம். கால்களில் வீக்கம் உள்ள அல்லது டயாலிசிஸ் செய்யும் சிறுநீரக நோயாளிகளுக்கு செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடிப்பது ஆபத்தானது.

இதய பிரச்சனை -

இதய நோயாளிகள் அனைவருக்கும் செம்பு நீர் நல்லதல்ல. சிறிது தூரம் நடக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சிரைக்கத் தொடங்கும் நோயாளிகள் செம்புத் தண்ணீரைக் குடிக்கக் கூடாது.  இந்த பிரச்சனை இருப்பவர்கள் தாமிர பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். 

செம்பு தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது?

வெறும் வயிற்றில் தாமிர நீரைக் குடிப்பது நல்லது என்பதால், காலை நேரமே சரியான நேரம்.

மேலும் படிக்க | நீரஜ் சோப்ரா தினமும் என்ன சாப்பிடுகிறார் தெரியுமா? ஒலிம்பிக் மெடலுக்கு பின் இருக்கும் ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More