Home> Lifestyle
Advertisement

WhatsApp Upadate: இனி வாட்ஸ்அப் Web-யிலும் ஆடியோ & வீடியோ கால் செயலாம்...!

வாட்ஸ்அப் நிறுவனம், அதன் வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் ஆதரவைக் கொண்டு வரவுள்ளது..!

WhatsApp Upadate: இனி வாட்ஸ்அப் Web-யிலும் ஆடியோ & வீடியோ கால் செயலாம்...!

வாட்ஸ்அப் நிறுவனம், அதன் வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் ஆதரவைக் கொண்டு வரவுள்ளது..!

தற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் வெப்-யில் (Whatsapp web) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. 

வாட்ஸ்அப் தனது பீட்டா பயனர்களுக்காக புதிய 2.2043.7 அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஆப்பின் வெப் வெர்ஷனுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் ஆதரவைக் கொண்டுவருகிறது. இதன் பொருள் என்னவென்றால், Whatsapp web மூலம் குரல் அழைப்பு (Voice Call) மற்றும் காணொளி அழைப்புகளை (Video call) செய்வதற்கான திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், இது வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | 

fallbacks

வாட்ஸ்ஆப்-யின் பீட்டா அப்டேட்ஸ் மற்றும் புதிய அம்சங்களை பற்றிய தொடர்ச்சியான தகவல்களை வெளியிடும் Wabetainfo தளமான ஸ்கிரீன் ஷாட்களின்படி, பயனர்கள் வாட்ஸ்அப் வெப்பில் இருந்து அழைப்புகளைப் பெறும் போது, உள்வரும் அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ கூடிய ஒரு விண்டோ காண்பிக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் யாரையாவது அழைக்கும் போது, குறிப்பிட்ட வாட்ஸ்அப் அழைப்பின் ஸ்டேட்டஸை உள்ளடக்கிய ஒரு சிறிய விண்டோ காண்பிக்கப்படும்.

Whatsapp web ஒரு தனிப்பட்ட தொடர்பை அழைக்கும் திறனைத் தவிர்த்து, குழு ஆடியோ (Group Audio) மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஆதரவைச் சேர்க்கவும் வாட்ஸ்அப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரையிலாக இந்த அம்சம் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, ஆனால் வாட்ஸ்அப் விரைவில் இதை வழங்க திட்டமிட்டு வருகிறது.

Read More