Home> Lifestyle
Advertisement

பஞ்சாங்கம்: குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

நாள்காட்டியில் உள்ள குளிகை நேரம் பற்றி தெரியுமா? இது நல்லதா? கெட்டதா? இந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா? செய்ய கூடாதா

பஞ்சாங்கம்: குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

காலண்டரில் பொதுவாக நீங்கள் என்னவெல்லாம் பார்ப்பீர்கள்? பொதுவாக நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் என சிலவற்றை மட்டுமே பார்ப்பதே வழக்கம். 

நமது நாள்காட்டிகள் அனைத்திலும் குளிகை நேரம் என்று ஒரு வார்த்தை இருக்கும். பொதுவாக இந்த குளிகை நேரம் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை. இது நல்லதா? கெட்டதா? இந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா? செய்ய கூடாதா என்பது யாருக்கும் தெரியாது. 

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது. குளிகையில் நீங்கள் நினைத்த காரியங்களை செய்தால் திரும்பத் திரும்ப பன்மடங்காக வளர்ச்சியடையுமாம். குளிகை எந்தெந்த கிழமைகளில், எந்தெந்த நேரத்தில் வருகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Also Read | மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய வேண்டியது 

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் நான்கரை மணி வரை இருக்கும் குளிகை நேரம், அடுத்தநாளான திங்கட்கிழமையன்று மதியம் ஒன்றரை முதல் 3 மணி வரை இருக்கும். செவ்வாய்கிழமையன்று பிற்பகல் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை குளிகை சமயம் இருக்கிறது.

புதன்கிழமையன்று காலை பத்தரை மணி முதல் 12 மணி வரை இருக்கும் குளிகை நேரமானது, வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பத்தரை மணி வரை நீடிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை ஏழரை மணி முதல் 9 மணி வரையிலும் இருக்கும் சனிகிழமை காலை 6 மணி முதல் ஏழரை வரையிலும் குளிகைக் காலம் இருக்கும்.

குளிகை நேரத்தில் பொன் மற்றும் பொருட்கள் வாங்குவது நல்லது. இந்த நேரத்தில் எது வாங்கினாலும், அது பலமடங்காக அதிகரிக்கும். குளிகை நேரங்களில் கடன்களை அடைத்தால், கடன் விரைவில் அடைந்துவிடும். குளிகை நேரத்தில் பணத்தை சேமித்தால், அது சேமிப்பை அதிகரிக்கும்.    

Also Read | வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம் கட்டுவது ஏன்

குளிகை நேரத்தில் செய்ய கூடாத விஷயங்கள் எனவும் சில விஷயங்கள் உள்ளன. குளிகை நேரத்தில் செய்யும் காரியம் திரும்ப திரும்பத் தொடரும் என்பதால் திருமணம் செய்தால் மணவாழ்க்கை சிறப்பானதாக இருக்காது. விவாகரத்து ஏற்படும் வாய்ப்பும், மீண்டும் திருமணம் செய்யும் நிலை ஏற்படலாம் என்பதால் குளிகை நேரத்தில் திருமணம் செய்வது தவிர்க்கப்படுகிறது.  

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல, குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்லும்.

Also Read | தொழில் செழிப்படைய 5 ஜோதிட பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More