Home> Lifestyle
Advertisement

வரும் 21, 26 விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு விழா!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டிவிட்டரில் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கோலி- அனுஷ்கா திருமண வரவேற்பு இரண்டு இடங்களில் நடக்கிறது. வருகிற 21-ம் தேதி டெல்லியிலும், 26-ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

டெல்லியில் நடைபெறும் திருமண வரவேற்பில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். மும்பையில் நடைபெறும் திருமண வரவேற்பில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

Read More