Home> Lifestyle
Advertisement

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் தரிசனம், நேரங்கள் மாற்றம்!!

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள்.

இதனால் திருமலை திருப்பதி கோவில் பகுதியில் பக்தர்களுக்காக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 29 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசல் திறந்ததும் முதலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் 28-ம் தேதி காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர்.

> அரசியல் கட்சிகளைச் சேர்ந்த விஐபிக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி அதில் 6 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
> அரசு அதிகாரிகளைச் சேர்ந்த விஐபிக்கு ஒரு டிக்கெட் வீதம் வழங்கி அதில் 4 பேர் தரிசனத்துக்கு அனுமதிப்படுகின்றனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28-ம் தேதியில் இருந்து ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. 

இதை தவிர இந்த 5 நாட்களும் 24 மணி நேர திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Read More