Home> Lifestyle
Advertisement

2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!

Upcoming Electric Cars 2023 : இந்தாண்டு இந்திய சந்தைகளை மிரட்ட வரும் ஆறு முக்கிய மின்சார கார்கள் குறித்தும், அவற்றின் முக்கிய அம்சங்கள் குறித்தும் விலை முதல் அனைத்தையும் இதில் காணலாம். 

2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!

இந்தியாவில் அதிகரித்து கொண்டே வரும் எரிபொருள் விலைகள், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இருப்பதால் அரசாங்கம் வழங்கும் மானியங்கள் ஆகியவற்றால் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicle) நல்ல ஊக்கத்தைப் பெற்றுள்ளன. 

அந்த வகையில்,  எலெக்ட்ரிக் கார்களும் நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டன. இந்த ஆண்டு வெளிவர உள்ள  எலெக்ட்ரிக் கார்களின் மாடல்கள் அதனை உறுதிப்படுத்துகிறது. 2022இல் டாடா டியாகோ போன்ற மலிவு விலை கார்கள் முதல் BYD Atto 3 போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் கார்கள் வரை பல எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ், MG, மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார் சந்தைக்கு வர காத்திருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் EV

இந்திய எலெக்ட்ரிக் கார் வகைகளில் முன்னணியில் இருப்பது டாடா மோட்டார்ஸ். அதன் பிரபலமான உள் எரிப்பு எஞ்சின் (ICE) ஹேட்ச்பேக்  ஆல்ட்ராஸின் மின்சார மாறுபாட்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ட்ராஸ் மின்சரா கார் அந்நிறுவனத்தின் ஜிப்ட்ரான் உயர் மின்னழுத்த தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250-300 கிமீ வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக மின்சார கார் குறிப்பிட்ட மாற்றங்களுடன் அதன் ICE மாறுபாட்டின் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். வாகனத்தை 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய வெறும் 60 நிமிடங்கள் போதும். 

BMW iX1

நீங்கள் ஒரு பிரீமியம் மின்சார SUV காரை எடுக்க வேண்டும் என இருந்தால், BMW iX1 கார் தான் நீங்கள் வாங்க வேண்டிய கார் ஆகும். அனைத்து எலக்ட்ரிக் SUV காரின் விலை சுமார் ரூ. 60 லட்சம். 2023 ஆம் ஆண்டின் பிற்பாதி இந்த கார் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த காரில் 313 ஹெச்பி ஆற்றலையும், 494 என்எம் ஆற்றலையும் உருவாக்கக்கூடிய இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 438 கி.மீ., வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 29 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.

fallbacks

மேலும் படிக்க | Tax Saving Plans : 2023இல் வருமான வரியை குறைக்கணுமா... இதை பண்ணுங்க!

மஹிந்திரா XUV400 EV

2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள முதல் மின்சார கார்களில் ஒன்றாக மஹிந்திரா XUV400 EV கார் இருக்கும். XUV400, மஹிந்திரா நிறுவனத்தின் முழுமையாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் கார் இதுதான். ஜனவரி மாதத்தில் வெளிவர உள்ள கார் மூன்று மாடல்களில் கிடைக்கும். இந்த மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கி.மீ., தூரம் வரை செல்லும் என்று மஹிந்திரா நிறுவனம் கூறுகிறது. 50 நிமிடங்களில் 0 முதல் 80% வரை காரை சார்ஜ் செய்யலாம். இதனால் உங்கள் காரில் விரைவாக சார்ஜ் ஏற்ற முடியும். இதன் விலை ரூ. 17 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MG ஏர் EV

MG ஏர் EV, ஒரு சிறிய ரக மின்சார கார், இந்தியாவில் 2023 முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியாவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் இந்த  காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ வாகனமாகும். நாட்டில் ஆரம்ப விலை சுமார் ₹10 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிமீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 68 ஹெச்பி பவர் அவுட்புட் கொண்ட ஒற்றை முன்-அச்சு பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் உள்ளது.

ஹூண்டாய் IONIQ 5

ஹூண்டாய் நிறுவனம், இந்தாண்டு நாட்டின் இரண்டாவது மின்சார கார் ஆன IONIQ 5 என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. E-GMP இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை செல்லலாம். காரை வெறும் 18 நிமிடங்களில் 10 முதல் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம். வாடிக்கையாளர்கள் இந்த EV காரின் உட்புறங்களைத் மாற்றிக்கொள்ள முடியும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

சிட்ரோயன் eC3

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிட்ரோயன் தனது முதல் மின்சார காரான eC என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் கார் விலை சுமார் ரூ.12 லட்சம் இருக்கும். டாடா டியாகோ மின்சார கார் போன்றவற்றுடன் இந்த கார் கடுமையாக போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிட்ரோயன் நிறுவனம் இதுவரை இந்த கார் குறித் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த காரில் 30.2kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறப்படுகிறது. இதில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார் 86 பிஎச்பி ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஹெல்மெட் வாங்கி இத்தனை நாட்கள் ஆகிவிட்டதா? உடனே மாற்றிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More