Home> Lifestyle
Advertisement

கவனம் பயணிகளே... ரயிலில் டிக்கெட் எடுத்த பின் உடனே இதை சரி பாருங்க!

Indian Railways: பயணிகள் தங்கள் ரயில் பயணத்தில் கவனமாக இருப்பதை போன்றே, ரயிலில் டிக்கெட் எடுக்கும்போதும், எடுத்த பின்னும் அதனை கவனமாக சரி பார்க்க வேண்டும். 

கவனம் பயணிகளே... ரயிலில் டிக்கெட் எடுத்த பின் உடனே இதை சரி பாருங்க!

Indian Railways: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரயில்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ரயில்வேயில் பயணம் செய்வதும் மற்ற பொது போக்குவரத்துக்களை விட மக்களுக்கு மிகவும் வசதியானது மற்றும் செலவும் குறைவாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் இதனாலேயே ரயிலில் பயணம் செய்கின்றனர். 

தொலைதூரப் பயணமாக இருந்தாலும் சரி, குறுகிய தூரப் பயணமாக இருந்தாலும் சரி, ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிப்பதே முறையானது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய ஒன்றாகும். இருப்பினும், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதும், டிக்கெட் கவுன்டரில் எடுக்கும்போதும் மக்கள் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். 

பிரச்னையை தவிருங்கள்

குறிப்பாக, எந்தவொரு நபரும் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தாலோ அல்லது சாதாரண டிக்கெட்டை எடுத்தாலோ, அதில் பயணம் குறித்த பல தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. டிக்கெட் வாங்குபவர் இந்த தகவலை எப்போதும் நினைவில் வைத்திருந்து, அதனை சரிபார்க்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு சிறு தவறு காரணமாக, மக்கள் மிகவும் பாதிப்பிற்கும் உள்ளாகலாம். ரயில் டிக்கெட்டை வாங்கும் போதெல்லாம், நீங்கள் சென்று சேர வேண்டிய நிலையத்தின் பெயர் கண்டிப்பாக ரயில் டிக்கெட்டில் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Indian Railways: உங்களுக்கு தெரியுமா... ரயில் ஓட எத்தனை இன்ஜின் ஆயில் தேவை...!!

இந்த முறையில், டிக்கெட்டை வாங்கிய பிறகு எப்போதும் சென்று சேரும் ரயில் நிலையத்தின் பெயரைச் சரி பார்த்துக்கொள்வது பல விஷயங்களில் உங்களை காப்பாற்றும். ரயில்வே கவுன்டரில் இருந்து டிக்கெட் எடுத்தால், சில நேரங்களில் அவசரத்தில் அதாவது மனிதத் தவறு காரணமாகவும் கூட, நிலையத்தின் பெயரை மாற்றி அச்சிடவோ அல்லது தவறாக அச்சிடவோ அதிக வாய்ப்புள்ளது. 

இதனால் நீங்கள் சென்று சேர வேண்டிய ரயில் நிலையம் டிக்கெட்டில் முறையாக அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ரயில் நிலையத்தின் முழு மற்றும் சரியான பெயரை அதில் குறிப்பிடவும். ரயில் நிலையத்தின் பெயரை முழுமையாகவோ அல்லது சரியாகவோ குறிப்பிடாவிட்டாலும் பல நேரங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

உதாரணமாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலேயே பல ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை வெளியூர் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களும் இதையே அதிகம் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை எழும்பூரில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்று டிக்கெட் கவுன்டரில் கேட்டால், டிக்கெட்டை சரிபார்த்து அதனை ரத்து செய்து தருவார்கள். 

அதாவது, நீங்கள் கிண்டி ரயில் நிலையத்தின் கவுண்டரில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிக்கெட் எடுத்தால், அது சென்னை எழும்பூர் - திருநெல்வேலி என டிக்கெட்டில் பதிவாகும். அந்த சமயம் உங்களுக்கு டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் எழும்பூர் சென்று தான் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியும். அதுவே நீங்கள் சென்னை கிண்டி என ரயில் நிலையத்தின் பெயரை முழுமையாக குறிப்பிட்டு டிக்கெட் எடுத்தால் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே, இதுபோன்று பிரச்னைகளை தவிர்க்க ரயில் நிலையத்தின் பெயரை சரியாகவும், முழுமையாகவும் கொடுக்கவும். 

மேலும் படிக்க | மிஷன் 3000 மெட்ரிக் டன்... அலுமினியம் ரயில் பெட்டிகள்... ரயில்வேயின் அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More