Home> Lifestyle
Advertisement

வீட்டிற்கு பாம்பு வராமல் இருக்க இதை இப்போதே செய்துவிடுங்கள்..!

Home Tips : மழைக்காலமாக இருப்பதால் பாம்புகள் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குள் புகுவதை தவிர்க்க முடியாது. இருப்பினும் உங்கள் வீட்டில் இந்த 5 செடிகள் இருந்தால் பாம்பு அந்த பக்கமே வராது. 

வீட்டிற்கு பாம்பு வராமல் இருக்க இதை இப்போதே செய்துவிடுங்கள்..!

Home Tips : மழைக்காலம் தொடங்கிவிட்டதால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் வேண்டுமானாலும் பாம்புகள் இருக்கும் அபாயம் உள்ளது. ஏனென்றால் தொடர்ச்சியாக மழை பெய்யும்போது பாம்புகள் இருக்கும் இடங்கள் எல்லாம் மழை நீர் புகுவதால் அவை தற்காத்துக் கொள்ள குடியிருப்புகளை நோக்கி செல்லும். நகரப்பகுதிகளுக்கும் பாம்பு வரும் ஆபத்து இருக்கிறது. இந்த சூழலில் பாம்புகள் வீடுகளுக்கு வராமல் இருக்க வேண்டும் என நினைத்தால், இந்த 5 செடிகளை வீட்டின் அருகே வளர்க்கலாம். அந்த செடிகளின் வாசம் பாம்புகளுக்கு பிடிக்காது.

சாமந்திப் பூ

சீக்கிரம் வளரக்கூடிய செடிகளில் ஒன்று சாமந்தி. இந்த செடியில் பூக்கள் எல்லாம் கொத்து கொத்தாக பூக்கும். அப்போது இது இருக்கும் இடமே ஒரே சாமந்திப் பூ வாசனையாக இருக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்கும் இந்த சாமந்தி பூவை கடவுளுக்கும் மாலையாக கோர்த்து வைக்கலாம். அதேநேரத்தில் இந்த வாசனை பாம்புகளுக்கு அறவே பிடிக்காது. எனவே பாம்பு வராமல் இருக்க முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என நினைத்தால் இந்த செடியை வீட்டின் அருகே வளர்க்கவும். 

மேலும் படிக்க | திருமண உறவில் அதிக கோபம் வருகிறதா... இந்த 4 விஷயங்களை செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்!

கற்றாழை

கற்றாழை ஒரு முள் செடி. இந்த செடி பல ஆயுர்வேத பலன்களை எல்லாம் கொண்டிருக்கும் அதேவேளையில் பாம்புக்கு இந்த செடியின் வாசமும் பிடிக்காது. ஒருவித மருந்து வாசம் போல் கற்றாழையின் வாசம் இருக்கும் என்பதால் செடி இருக்கும் பக்கமே பாம்புகள் வராது. இதற்கு மட்டும் அல்லாமல் கற்றாழையை முகம் பொலிவு, உடல் குளிர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

வேப்ப மரச்செடி

வேப்ப மரச் செடிகள் இருக்கும் இடத்துக்கும் பாம்பு வராது. ஏனென்றால் எல்லோருக்கும் தெரிந்த காரணமான அதன் கசப்பு தன்மை தான். வேப்ப மரத்தின் இலை, பட்டை, பழம் என எல்லாமும் கசப்புத் தன்மையாக இருப்பதால் இந்த மரச்செடி இருக்கும் இடத்துக்கும் பாம்புகள் வராது. ஒருவேளை வேப்ப மரம் வளர்க்க முடியாது என்றால் வேப்ப எண்ணெய் வாங்கி வந்து வீட்டின் சுற்றுப் புறத்தில் ஸ்பிரே போல் தெளித்துவிடுங்கள். அந்த வாசத்துக்கும் பாம்புகள் வராது.

வார்ம்வுட் செடி

பாம்புகளால் தாங்க முடியாத வாசனையை கொண்ட ஒரு தாவரச் செடி தான் வார்ம் வுட். வீட்டு தோட்டத்தின் அழகுக்காக வைக்கப்படக்கூடிய செடி. பால்கனியில் கூட இந்த செடியை வளர்க்க முடியும். புடலங்காய் செடியின் வாசனை எப்படி இருக்குமோ, அதனைப்போன்றே இந்த செடியின் வாசனை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இவை பாம்புகளுக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. 

மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் உடலுறவு... பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்!

இந்த 5 செடிகளை வீட்டில் வைத்தால் உங்கள் வீட்டு பாம்பு தொல்லையில் இருந்து நிம்மதியாக இருக்கும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More