Home> Lifestyle
Advertisement

09-07-2018: இன்றைய முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

09-07-2018: இன்றைய முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

> தமிழக சட்டசபை: லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல்!

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

> கோர்ட் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்!

சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்  நடவடிக்கைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

> ஓபிஎஸ் உள்ளிட்ட 11 MLA-க்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

தமிழக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, திமுக கொறடா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

> பிரபல தாதா உபி-ன் பாக்பட் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!

உத்தரபிரதேச மாநில பாக்பட் சிறைச்சாலையில் வைத்து பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சக கைதியால் சுட்டுக் கொலை செய்யபட்டார்.

> Watch! நடனமாடி வீடியோ வெளியிட்ட ஈரான் பெண் கைது!

ஈரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

> சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும்! ராமதாஸ்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

> திருப்பதி கோவிலில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து!

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நாளை 5 மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

> J&K: பாதுகாப்பு படையினர் நடத்திய encounter-ல் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

> 2000 ரன்களை கடந்து சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

> இன்றும் மும்பையில் கனமழை! தத்தளிக்கும் மும்பைவாசிகள்!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

> துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: 10 பலி!

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் படுகாயமடைந்தனர்.

> 3_வது டி20 போட்டி: 6 டி20 தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

> 09-07-2018: ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!

 

Read More