Home> Lifestyle
Advertisement

திருமண உறவில் அதிக கோபம் வருகிறதா... இந்த 4 விஷயங்களை செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்!

Relationship Tips: திருமணமடைந்த பின்னர் வீட்டில் அடிக்கடி உங்கள் பார்ட்னரிடம் கோபப்படுகிறீர்கள் என்றால், இந்த 4 விஷயங்களை தெரிந்துவைத்துக்கொள்வதன் மூலம் கோபம் முற்றிலும் குறைந்து வாழ்க்கை நிம்மதியாகிவிடும்.

திருமண உறவில் அதிக கோபம் வருகிறதா... இந்த 4 விஷயங்களை செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்!

Relationship Tips In Tamil: உங்கள் பார்ட்னரை காதலிக்கும் வரை உங்களுக்குள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அனைத்தும் நல்லப்படியாக சென்றுகொண்டிருக்கும். அதுவே உங்களுக்கு திரு பின்னரோ அல்லது நீங்கள் லிவ்-இன் உறவுக்கு வந்துவிட்டாலோ உங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்... இருவருக்கும் மற்றவரை பார்த்தாலே கோபம் வரும்... இது எப்படி என பலருக்கும் புரியாது. 

நீங்கள் காதலிக்கும் போது ஒரு வீட்டில் இணைந்து இருக்க மாட்டீர்கள். மேலும் காதலில் இருக்கும்போது மற்றவர்களின் தவறுகள் பெரும்பாலும் சகித்துக்கொள்வீர்கள். ஆனால் திருமணமான பின் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் உங்கள் குடும்ப வாழ்க்கையை சோதிக்கும். வீட்டில் பிரச்னையாகிவிட்டால் வெளியில் பணியிடத்திலும் உங்களுக்கு பிரச்னை தொடர ஆரம்பித்துவிடும்.

4 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் உடலுறவு... பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்!

இதற்கு தீர்வுதான் என்ன நீங்கள் கேட்டீர்கள் என்றால், அதற்கும் வழி இருக்கிறது. வயதில் மூத்தவர்கள் மற்றும் வல்லுநர்கள் பெரும்பாலும் இந்த 4 விஷயங்களை கூறுகின்றனர். இந்த 4 விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும்போது திருமண உறவில் கோபம் வராது மற்றும் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை தேடுவீர்கள். அந்த 6 விஷயங்கள் குறித்து விரிவாக காணலாம். 

1. கோபத்தை தள்ளிப்போடுங்கள்

இதை திருமண உறவில் என்றில்லை, பொதுவாகவே அனைத்து விஷயத்திற்கும் பொருந்தும். உங்களுக்கு சட்டென கோபம் வருகிறது என்றால் உடனே அந்த கோபத்தை ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெளிப்படுத்துவோம் என நினைத்து, வேறு வேலைகளை பார்க்கத் தொடங்குங்கள். இல்லையெனில் கோபப்படுவதால் என்ன நன்மை என்பதை சில நிமிடங்களுக்கு சிந்தியுங்கள். இது உங்கள் கோபத்தை பெரும்பாலும் தடுத்தும்விடும், குறைத்தும்விடும். 

2. கோபத்தை புரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள், நியாயமான முறையில்தான் கோபப்படுகிறீர்களா, யார் மீது கோபம் என்பதை சற்று சிந்தியுங்கள். உங்கள் கோபத்தையும் உணர்ச்சியையும் புரிந்துகொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். 

3. தொனியை மாற்றுங்கள்

கோபத்தை கட்டுப்படுத்த நீங்கள கோபத்தை வெளிகாட்டும் முறையில் கவனம் செலுத்துங்கள். சத்தம் போட்டு, கூச்சல் போட்டு, அதட்டி உங்களின் கோபத்தை வெளிக்காட்டாமல், என்ன பிரச்னையோ அதை நிறுத்தி நிதானமாக உங்கள் பார்ட்னரிடம் கூறி அதற்கான தீர்வை நோக்கி செல்லுங்கள். சத்தமாக பேசுவதாலோ திட்டுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

4. பின்விளைவுகளை யோசியுங்கள்

தீக்காயம் ஆறிவிடும், உங்கள் பேச்சால் ஏற்படும் காயம் ஆறாவே ஆறாது. எனவே கோபத்தில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். கோபத்தில் எதை பேசினாலும் அதன் பின்விளைவுகளையும் நீங்கள் சிந்திக்க வேண்டும். இதுவும் கோபத்தை தணிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. குடும்ப வாழ்வில் பிரச்னை என்றால் வல்லுநரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More