Home> Lifestyle
Advertisement

World Family Day: கொஞ்சம் தியாகம்-நிறைய ஆனந்தம்..குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்!

International Day of Families 2023 :உலக குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ் இதோ. 

World Family Day: கொஞ்சம் தியாகம்-நிறைய ஆனந்தம்..குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்!

உலகம் முழுவதும் இன்று குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் அனைவருமே அவரவர் இல்லங்களில் கொரோனா ஊரடங்கின்போது அடங்கியது. அப்போது, செல்போன்-டிவியை விடுத்து பலர் தங்கள் அலுவல பணிகளை வீட்டிலிருந்தே பார்த்தாலும் குடும்பத்துடன் செலவிட பலருக்கும் நேரம் கிடைத்தது. இதனால், பிளவுபட்ட குடும்பங்களும் ஒன்று சேர்ந்து சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் இந்த டிப்ஸை ஃபாலோ பன்னுங்க. 

அலுவலக-வீட்டு வாழ்க்கையை பேலன்ஸ் செய்யுங்கள்

வேலைப்பார்த்து கொண்டே வீட்டை பார்ப்பது பலருக்கு கஷ்டமான காரியம்தான். ஆனால் அதை நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் ஜித்து வேலையே அடங்கி உள்ளது. கிடைக்கும் சமயங்களில் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அப்படி வர்க் ஃப்ரம் ஹோம் எடுக்க முடியாத பட்சத்தில் உங்களுக்கு விடுமுறை வரும் நாட்களில் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அவர்களை, தியேட்டர்-பார்க் பீச் போன்ற பொதுவெளிகளுக்கு அழைத்து சென்று பிடித்தவற்றை வாங்கி கொடுங்கள். 

நாளின் இறுதியில் குடும்பத்தாரிடம் பேசுங்கள்

அலுவலகம் அல்லது வெளி வேலைகள் முடிந்து வீடு திரும்பிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிவியை முறைத்து பார்த்து விட்டு தூங்க கிளம்புவதை  விட, ஒரு 10 நிமிடங்களாவது குடும்பத்தாரிடம் பேசுங்கள். அந்த நாளில் உங்களுக்கு நடந்த நல்ல-கெட்ட விஷயங்களை அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் சந்தாேஷமான செய்திகளை பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும், சோகமான செய்திகளை பகிர்ந்தால் மனதில் உள்ள பாரம் பாதியாக குறையும் என்பார்கள். அதை உங்களின் குடும்பத்தினரை வைத்து ட்ரை பண்ணி பாருங்கள். கண்டிப்பாக உபயோகரமாக இருக்கும். 

மேலும் படிக்க | அதிகரிக்கும் அரேன்ஜ் மேரேஜ்... இளைஞர்களின் இந்த மோகத்திற்கு என்ன காரணம்?

குடும்பத்தினரை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் குழந்தை அல்லது தம்பி-தங்கை ஏதாவது ஹாபி வைத்திருந்தார் என்றால் அது குறித்து எந்த மாதிரியான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை கேளுங்கள். அவர்களை பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார் என்பதை நீங்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

எப்போதாவது சர்ப்ரைஸ் செய்து பழகுங்கள்

உங்கள் குடும்பத்தினருக்கு பிறந்தநாள் அல்லது அவர்களுக்கு ஏதேனும் முக்கியமான நாட்கள் வந்தால், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். அது பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பது கேக் வெட்டி கொண்டாடுவது என்றிருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அலுவலகத்தில் பாதி நாள் விடுப்பு எடுத்துவிட்டு திடீரென்று அவர்களை எங்காவது வெளியில் அழைத்து செல்லலாம். அந்த ஒருநாள் அவருடைய வீட்டு வேலையை நீங்கள் செய்து கொடுக்கலாம். 

முடிவுகளை கலந்து ஆலோசனை செய்யுங்கள்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த முடிவினை எடுக்கும் போதும் உங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசியுங்கள். அவர்கள் உங்களது முடிவில் இருக்கும் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து பின்பு கூறுவார்கள். இது நீங்கள் எடுத்திருக்கும் முடிவு சரிதானா என்று தெளிவாக உணர வைக்கும். 

உங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்

இப்படி அனைத்து வேலைகளையும் நீங்கள் ஒற்றை ஆளாக பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். குடும்பம் என்பது அனைவரும் ஒன்றிணைந்த ஒன்று. அதனால், நீங்கள் தனிப்பட்ட வகையில் என்ன முயற்சி செய்தாலும் கூட்டு முயற்சி இருந்தால்தான் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

மேலும் படிக்க | கார் லோன் வாங்க போறீங்களா.... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More