Home> Lifestyle
Advertisement

Driving License வாங்க RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா? புதிய விதிமுறைகள் என்ன?

ஓட்டுநர் உரிமத்திற்காக RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

Driving License வாங்க RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா? புதிய விதிமுறைகள் என்ன?

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமத்திற்காக RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

இந்த புதிய விதியின் கீழ், கற்றுக் கொள்பவருக்கு கொடுக்கும்  “L” உரிமத்தைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் ஆன்லைனிலேயே நாடைபெறும். அதாவது விண்ணப்பிக்கும் முறை முதல் லைசன்ஸ் அச்சிடும் இறுதிக்கட்டம் வரை இனி ஆன்லைனில் செய்யப்படும். 

அதுமட்டுமல்ல, மருத்துவ சான்றிதழ்கள், வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவருக்கான  “L” உரிமம், ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைத்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றிற்கும் ஆன்லைன் நடைமுறைகளை பயன்படுத்தலாம்.

Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே! 

ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport & Highways) கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிகள் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பதிவு செய்த சான்றிதழை புதுப்பிப்பது இப்போது 60 நாட்களுக்கு முன்பே செய்யப்படலாம், அதே நேரத்தில் தற்காலிக பதிவுக்கான கால அவகாசமும் 1 மாதத்திலிருந்து 6 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், “L” உரிமத்திற்கான நடைமுறையில் அரசாங்கம் இப்போது சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதன்படி ஓட்டுநர் சோதனை இப்போது டுடோரியல் மூலம் ஆன்லைனில் செய்யப்படும். சுருக்கமாக சொல்வதானால், இப்போது உரிம சோதனைக்காக ஆர்டிஓ (RTO) அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.

Also Read | சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்

மார்ச் மாத இறுதியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஓட்டுநர் உரிமம் ( driving licence (DL)), பதிவு சான்றிதழ் (registration certificate (RC)) போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து, 2021 ஜூன் 30 வரை அனுமதித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தொற்றின் தாக்கம் தான். 

நாடு முழுவதும் COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 2020, பிப்ரவரி முதல் தேதி முதல் காலாவதியாகும் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களின் செல்லத்தக்க காலம் 2021 ஜூன் 30 என்று அரசு அறிவித்துள்ளது.  

இது போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெற குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிவுறுத்தலாகவே இது இருக்கலாம் என்றும் அரசின் சுற்றறிக்கை மேலும் கூறியுள்ளது.

Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More