Home> Lifestyle
Advertisement

தனியார் வங்கியில் யூபிஐ ட்ரான்சாக்சனில் விதிமுறைகள் மாற்றம்!

ஹெச்டிஎஃப்சி வங்கி யுபிஐ கட்டண முறைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்தி இருக்கிறது.  

தனியார் வங்கியில் யூபிஐ ட்ரான்சாக்சனில் விதிமுறைகள் மாற்றம்!

தற்போது பலரும் யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் முறையில் கட்டணம் செலுத்த தொடங்கிவிட்டனர்.  நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.  இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் யூபிஐ கட்டண முறையில் உள்ள சில விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை திருத்தி அமைத்துள்ளது.  இவ்வங்கியானது அதன் இணையதள பக்கத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, அதில் யூபிஐ-ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

fallbacks

மேலும் படிக்க | குழந்தைகளுக்கான ஆதார்: இந்த விஷயங்களில் கவனம் தேவை

இதன்மூலம் தினசரி 1 லட்சம் ருபாய் வரை 24 மணி நேரத்தில் டிரான்ஸாக்ஷன் செய்யலாம், தினமும் 10 விதமாக செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களில் பில் செலுத்துதல், வணிக ரீதியான டிரான்ஸாக்ஷன்களை செய்து கொள்ளலாம்.  புதிய யூபிஐ பயனர்கள் அல்லது சமீபத்தில் சிம்/டிவைஸ் போன்றவற்றை மாற்றியவர்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் 24 மணி நேரத்திலும், ஐபோனில் 72 மணி நேரத்திலும் ரூ.5000 மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்யமுடியும்.  

TPAP-ன் ஆப்ஸ் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அந்த ஆப்பில் கேட்கப்பட்டுள்ளவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.  யூபிஐ பேமெண்ட் ஆர்டரில் உள்ள விவரங்களை பயனர்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும், இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் வங்கிக்கு ஏற்படும் இழப்பை அந்த பயனர் சரிசெய்ய வேண்டும்.  பயனர்கள் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் மூலம் பல வங்கி கணக்குகளுடன் யூபிஐ இணைத்த பிறகு டிரான்ஸாக்ஷனை தொடங்கலாம்.  யூபிஐ வசதியுடன் உள்ள வங்கி கணக்குகள் அனைத்தையும் தனி நபரின் பெயர் மூலம் திறக்க முடியும்.  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பயனர்கள் ஆர்பிஐ அல்லது என்சிபிஐ-க்கு எதிராக அதையும் செய்யமுடியாது.

fallbacks

வங்கியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www/hdfcbank.com-ல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் படித்து புரிந்துகொண்ட பிறகே வங்கியின் புதிய கொள்கைகளை ஏற்கின்றனர்.  யூபிஐ பயனர்கள் பிஎஸ்பி அல்லது டிபிஏபி மூலம் ட்ரான்ஸாக்ஷன் சம்மந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.  வணிக ரீதியிலான டிரான்ஸாக்ஷன் அல்லது நிதி ரீதியிலான ட்ரான்ஸாக்ஷன் என இரண்டு வகையான டிரான்ஸாக்ஷனில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க | ATM-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More