Home> Lifestyle
Advertisement

SpiceJet வழங்கும் அசத்தல் சலுகை... ₹1,515 கட்டணத்தில் விமான பயணம்.. மிஸ் பண்ணாதீங்க!

ஸ்பைஸ்ஜெட் சிறப்பு இன்க்ரெடிபிள் சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. ரூ.1,515க்கு விமான பயண வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 15 முதல் 20 வரையிலான முன்பதிவுகளுக்கு செல்லுபடியாகும்.

SpiceJet வழங்கும் அசத்தல்  சலுகை...  ₹1,515 கட்டணத்தில் விமான பயணம்.. மிஸ் பண்ணாதீங்க!

விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet), வெறும் 1,515 ரூபாய்க்கு விமானப் பயண வாய்ப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் இன்க்ரெடிபிள் சுதந்திர தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த செல் இன்று தொடங்கி ஆகஸ்ட் 20 வரை இயங்கும். இதில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 30, 2024 வரையிலான காலத்திற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். இதனுடன், நிறுவனம் ரூ.2,000 மதிப்புள்ள இலவச விமான வவுச்சர்களையும், ரூ.15க்கு விருப்பமான இருக்கை தேர்வுகளையும் வழங்குகிறது. இந்த சலுகையின் பலனை ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்தால் பெறலாம்.

பிரபல உள்நாட்டு வழித்தடங்களில் ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.1515

சென்னை-ஹைதராபாத் (Chennai-Hyderabad), மும்பை-கோவா (Mumbai-Goa), ஜம்மு-ஸ்ரீநகர் (Jammu-Srinagar), கோவா-மும்பை (Goa-Mumbai), கவுகாத்தி-பாக்டோக்ரா (Guwahati-Bagdogra) போன்ற பிரபலமான உள்நாட்டு வழித்தடங்களில் ஒரு வழி விமானக் கட்டணம் ரூ.1515 வழங்கப்படுகிறது. நேரடி உள்நாட்டு முன்பதிவுகளில் ஒரு வழிக் கட்டணத்தில் இந்தச் சலுகை செல்லுபடியாகும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகையின் கீழ் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் கிடைக்கும். குழு முன்பதிவுகளில் இந்த நன்மை கிடைக்காது என்றும் வேறு எந்த சலுகையுடனும் இணைக்க முடியாது என்றும் SpiceJet நிறுவனம் கூறுகிறது.

சலுகை கட்டணத்தில் முன் பதிவு செய்யும் முறை

SpiceJet நிறுவனம் இது குறித்து மேலும் கூறுகையில், விற்பனை முடிந்ததும், வாடிக்கையாளர்கள் ஏழு நாட்களுக்குள் ஒரு முன்பதிவுக்கு ரூ.2,000 மதிப்புள்ள இலவச விமான வவுச்சர்களைப் பெறுவார்கள். இவை ஒற்றைப் பயன்பாட்டிற்கானவை மற்றும் வேறு எந்த சலுகையுடனும் இணைக்கப்பட முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 15 ரூபாய்க்கு விருப்பமான இருக்கை தேர்வு வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை SpiceJet நிறுவன நெட்வொர்க் முழுவதும் கிடைக்கிறது. இதில் இணையதளம், m-சைட், மொபைல் பயன்பாடு, முன்பதிவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் ஆகியவை அடங்கும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட தகவல்

இச்சலுகை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இந்த விற்பனை குறித்த தகவலை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்தக் சலுகையின் கீழ், பயணிகள் தங்கள் குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடலாம். அதில் அவர்கள் மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயனடையலாம். உள்நாட்டு விமானங்களில் மட்டுமே இந்த சலுகையின் பலனைப் பெற முடியும்” என்று கூறியுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More