Home> Lifestyle
Advertisement

SBI கல்விக்கடன்: இனி வெளிநாடு சென்று படிப்பது மிக சுலபம்!!

வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி!! வெளிநாடுகளில் சென்று படிக்க அதிக செலவாவதைப் பற்றி உங்களுக்கு கவலை இருதால், இனி அந்த கவலை வேண்டாம்.

SBI கல்விக்கடன்: இனி வெளிநாடு சென்று படிப்பது மிக சுலபம்!!

புதுடெல்லி: வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி!! வெளிநாடுகளில் சென்று படிக்க அதிக செலவாவதைப் பற்றி உங்களுக்கு கவலை இருதால், இனி அந்த கவலை வேண்டாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் ஸ்டேட் வங்கி (SBI) உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நீங்கள் ரூ .7.30 லட்சம் முதல் ரூ .1.50 கோடி வரையிலான கடன் நன்மைகளைப் பெறலாம். SBI, ஒரு புதிய கல்விக் கடனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் நீங்கள் வெளிநாட்டில் படிக்க எளிய வகையில் வாய்ப்பு கிடைக்கும்.

எஸ்பிஐ குளோபல் எட்-வாண்டேஜ்

இந்த கடனுக்கு எஸ்பிஐ குளோபல் எட்-வாண்டேஜ் (SBI Global Ed-Vantage) என வங்கி பெயரிட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கை மற்றும் படிக்கும் வசதியை பெறுவார்கள். மாணவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

திட்டத்தில் என்ன படிப்புகள் உள்ளன?

1. வழக்கமான பட்டதாரி படிப்பு (Regular Graduate Degree) 

2. முதுகலை பட்டம் (Post-Graduate Degree)

3. டிப்ளமோ படிப்பு (Diploma Course)

4. சான்றிதழ் அல்லது முனைவர் படிப்புகள் (Certificate or Doctorate Courses)

எந்த நாடுகளில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்?

இந்த கடன் திட்டத்தின் (SBI Loan) கீழ், நீங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்டுள்ள எந்த படிப்புகளிலும் நீங்கள் சேர்க்கை பெறலாம்.

ALSO READ: SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!! 

எவ்வளவு கடன் கிடைக்கும்?

கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, வங்கியில் இருந்து ரூ .7.50 லட்சம் முதல் 1.5 கோடி வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கடனில் பெண்களுக்கு 0.50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதாவது, மாணவிகளுக்கு 8.15 சதவீத விகிதத்தில் கடன் கிடைக்கும்.

எந்தெந்த செலவுகள் கடனில் சேர்க்கப்படும்

படிப்பிற்கான பயணச் செலவை வங்கி கடனில் சேர்க்கும். கல்விக் கட்டணமும் இதில் சேர்க்கப்படும். தேர்வு கட்டணம், புத்தகங்கள், நூலகம் மற்றும் ஆய்வகச் செலவுகள், திட்டப் பணிகள் தவிர, ஆய்வறிக்கை, ஆய்வுப் பயணங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளும் இதில் சேர்க்கப்படும்.

இந்தக் கடனைப் பெற எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும்

10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பின் மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகளின் சான்றிதழ்கள். இது தவிர, சேர்க்கை சான்றுக்காக சேர்க்கை கடிதம் அல்லது கல்லூரியின் சலுகை கடிதத்தை கொடுக்க வேண்டும். இது தவிர, கோர்சில் உங்கள் சேர்க்கை செலவுகள் பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதவித்தொகை நகலும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் படிப்பின் நடுவில் இடைவெளி இருந்தால், அதற்கான சான்றிதழும் உங்களிடம் இருக்க வேண்டும்.

இது தவிர,

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

2. மாணவர் பெற்றோரின் PAN

3. ஆதார் அட்டையின் நகல்

4. மாணவருடைய பெற்றோரின் 6 மாத வங்கி கணக்கு அறிக்கை

ஆகியவற்றையும் வைத்திருக்க வேண்டும்.

கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்

கடன் வாங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தலாம். வெளிநாட்டில் படிக்கும் எந்த இந்திய மாணவரும் 15 ஆண்டுகளில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்தலாம். இந்த வகையில், இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டமாக பார்க்கப்படுகின்றது.

ALSO READ: அசத்தும் SBI: எஸ்.பி.ஐ வங்கியின் பென்சன் லோன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Read More