Home> Lifestyle
Advertisement

ரயில்வே விதிகள் மாற்றம்! இனி எந்த ஸ்டேஷனில் இருந்தும் ஏறிக்கொள்ளலாம்!

ஐஆர்சிடிசி அறிவிப்புப்படி, பயணிகள் ஒருமுறை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்ள முடியும்,    

ரயில்வே விதிகள் மாற்றம்!  இனி எந்த ஸ்டேஷனில் இருந்தும் ஏறிக்கொள்ளலாம்!

இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்திலிருந்தும் ரயிலைப் பிடிக்கலாம்.  இவ்வாறு செய்வதனால் ரயில்வே நிர்வாகம் உங்களுக்கு எவ்வித அபராதமும்  விதிக்காது.  மேலும் போர்டிங் நிலையத்தை மாற்ற, பயண டிக்கெட் புக்கிங்கில் சிறிது மாற்றங்களைச் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் நிர்வாகம் உங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடலாம். சில சமயங்களில் ஏதேனும் சில காரணங்களால் திடீரென்று போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.  

fallbacks

மேலும் படிக்க | ஸ்மார்ட்ஃபோன் மூலம் இலவசமாக ரயிலை கண்காணிப்பது எப்படி?

எடுத்துக்காட்டாக பயணிகள் ஏறும் இடத்திலிருந்து போர்டிங் ஸ்டேஷன் தொலைவில் இருக்குமேயானால் அந்த இடத்தை பயணிகள் சென்று சேர்வதற்கு நேரமாகிவிடும், அதனால் ரயிலை தவறவிட்டுவிட நேரிடலாம்.  பயணிகளின் அசௌகரியத்தை போக்கும் வகையில் ஐஆர்சிடிசி போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் வசதியை வழங்குகிறது.  ஐஆர்சிடிசி வழங்கக்கூடிய இந்த வசதியானது சில ஏஜென்சிகள் மூலமாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் செல்லுபடியாகும்.  மேலும் இந்த போர்டிங் ஸ்டேஷன் மாற்றத்தை பிஎன்ஆர்-ன் விகால்ப் ஆப்ஷனில் செய்யமுடியாது.  போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் எந்த பயணியும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மாற்றங்களைச் செய்வது அவசியமாகும்.  அதேசமயம் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் அவர்களது போர்டிங் ஸ்டேஷனை மாற்றினால், அந்த பழைய போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாது.

அதேபோல பயணிகள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அதுமட்டுமல்லாது போர்டிங் பாயிண்ட் மற்றும் மாற்றப்பட்ட போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டணத்தையும் அந்த பயணி செலுத்த வேண்டும்.  மேலும் ஐஆர்சிடிசி அறிவிப்பின்படி, பயணிகள் ஒருமுறை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்ள முடியும், அதனால் ஸ்டேஷனை மாற்ற உறுதியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே இந்த மாற்றத்தை செய்யுங்கள்.  இந்த போர்டிங் ஸ்டேஷன் மாற்ற செயல்முறையை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காண்போம்.

fallbacks

இதனை செய்ய முதலில் ஐஆர்சிடிசி-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு https://www.irctc.co.in/nget/train-search செல்லவும்.  லாகின் க்ளிக் செய்து அதில் பாஸ்வேர்டு போட்ட பின்னர் 'புக்கிங் டிக்கெட் ஹிஸ்டரி' என்பதற்குச் செல்லவும்.  அடுத்ததாக உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து, 'சேஞ்ச் போர்டிங் பாயிண்ட்' என்பதற்குச் செல்லவும்.  இப்போது திரையில் ஒரு புதிய பக்கம் தென்படும், அதில் கீழே காண்பிக்கும் இடத்தில் அந்த ரயிலுக்கான புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.  அவ்வாறு புதிய ஸ்டேஷனை தேர்ந்தெடுத்த பிறகு, 'ஓகே' என்பதை தேர்வு செய்யவேண்டும்.  அதன்பிறகு போர்டிங் ஸ்டேஷனை மாற்றியது குறித்த எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு வரும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இனி போர்வைகள் வழங்கப்படுமா? ரயில்வே அமைச்சகம் பதில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More