Home> Lifestyle
Advertisement

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிய விருப்பமா? இந்த தகுதிகள் அவசியம்

PNB Recruitment 2022: பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிய விருப்பமா? இந்த தகுதிகள் அவசியம்

PNB Recruitment 2022: பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pnbindia.inவில் அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம். இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் 103 பணியிடங்கள் நிரப்பப்படும். தீ பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் கீழ் அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோரியுல்ளது. ஆகஸ்ட் 30 தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். காலியிடங்கள்/ஒதுக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையானது, வங்கியின் உண்மையான தேவைக்கேற்ப மாறுபடலாம். வங்கியில் மொத்தம் 103 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தியாவில் எங்கும் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் படிக்க | தமிழக நீதிமன்றங்களில் பணிபுரிய ஆர்வம் உண்டா? 1412 பேருக்கு வாய்ப்பு

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக்கூடாது. பல விண்ணப்பங்கள் இருந்தால், ஒரு விண்ணப்பம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி (விரைவு தபால் /பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டும்): ஆகஸ்ட் 30, 2022

காலியிட விவரங்கள்
மொத்த பணிகளின் எண்ணிக்கை: 103 

அதிகாரி (தீ-பாதுகாப்பு): 23 பணிகள்
மேலாளர் (பாதுகாப்பு): 80 பணிகள்

மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

வயது வரம்பு
21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்
அதிகாரி – 36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840
மேலாளர் – 48170-1740/1-49910- 1990/10-69810

தகுதி அளவுகோல்கள்
மேலாளர் (பாதுகாப்பு): ஏஐசிடிஇ/யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம். ஜேஎம்ஜி ஸ்கேல்-Iல் உள்ள தீ பாதுகாப்பு அதிகாரி: நாக்பூரில் தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் (NFSC) பி.இ.(தீ). அல்லது AICTE/UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகத்தில் தீயணைப்பு தொழில்நுட்பம்/தீயணைப்பு பொறியியல்/பாதுகாப்பு மற்றும் தீ பொறியியலில் நான்கு வருட பட்டப்படிப்பு (B.Tech/BE அல்லது அதற்கு சமமான) ஏஐசிடிஇ/யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் பிரிவு அதிகாரி படிப்பு.

தேர்வு நடைமுறை
பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வங்கி அதன் விருப்பப்படி தேர்வு செய்யும் முறையைத் தீர்மானிக்கும்.

மேலும் படிக்க | மத்திய ரிசர்வ் போலீஸில் 4300 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பக் கட்டணம்
SC/ST/PWBD பிரிவினருக்கு: ரூ. 59/- [ஒரு வேட்பாளருக்கு ரூ. 50/- (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்)+ GST@18% ரூ. 9/-]
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ரூ 1003/- [ரூ. ஒரு வேட்பாளருக்கு 850 + GST@18% ரூ. 153/-]

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைகள் 2022: ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் எங்களது இணையதளமான www.pnbindia.in இணைப்பில் உள்நுழைந்து, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பத்தில், பரிவர்த்தனை எண்./UTR எண்களையும் குறிப்பிட்டு, விரைவுத் தபால் /பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் வங்கிக்கு அனுப்ப வேண்டும். பரிவர்த்தனையின் பெயர் மற்றும் தேதி, ஆன்லைன் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் மற்றும் பிற துணை ஆவணங்களின் நகல்கள் இணைக்கபட வேண்டும்.

தபால் உறையில் "அஞ்சல்:_____________________"  பணிக்கான விண்ணப்பம் என்று எழுதி, தலைமை மேலாளர் (சேர்ப்பு பிரிவு), மனிதவள பிரிவு, பஞ்சாப் தேசிய வங்கி, கார்ப்பரேட் அலுவலகம், பிளாட் எண் 4, செக்டார் 10, துவாரகா, புது தில்லி -110075 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More