Home> Lifestyle
Advertisement

chicken nugget சாப்பிட விண்வெளிக்கு போகனுமா? என்ன கொடுமை சார் இது?

விளம்பரத்திற்காக, பலூன் விட்டு பார்த்திருக்கோம்… பட்டம் விட்டு பார்த்திருக்கோம்… ஆனா, விண்வெளிக்கே chicken nuggetஐ அனுப்பிய சூப்பர் மார்க்கெட்டைப் பற்றித் தெரியுமா?

chicken nugget சாப்பிட விண்வெளிக்கு  போகனுமா? என்ன கொடுமை சார் இது?

லண்டன்: விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் மனிதர்களையும், ஏவுகணைகளையும் விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர், ஆனால் ஒரு பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடி சோதனை முயற்சியாக செய்த விஷயம், விண்வெளியில்  இதுவரை நடந்திராத ஒன்று. 'Iceland Foods Limited' என்ற

இங்கிலாந்தின் சூப்பர் மார்க்கெட் தனது 50 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு chicken nugget எனப்படும் ஒரு உணவு வகையை Spaceக்கே அனுப்பியிருக்கிறது.  அது தொடர்பான வீடியோவில், chicken nugget விண்வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது.

space marketing சேவைகளை வழங்கும் Sent Into Space என்ற   நிறுவனத்தை அணுகி, தனது வித்தியாசமான விருப்பத்தை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பி நிறைவேற்றிக் கொண்டது. சிக்கனை சாப்பிட வேண்டுமானால் விண்வெளிக்கு போக வேண்டுமா என்று கேட்கிறீர்களா?  
இந்த வேலைக்காக பணியமர்த்தப்பட்ட Sent Into Space என்ற நிறுவனம் விண்வெளி என்ற கருப்பொருளில் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களையும் விளம்பர சாகசங்களையும் செய்கிறது. 'வேல்ஸில் உள்ள ஒரு கிராமப்பகுதியின் தளத்திலிருந்து, இந்த Chicken Nugget அனுப்பப்பட்டது. பூமியின் வளிமண்டலத்திலிருந்து 110,000 அடி (அதாவது 33.5 கி.மீ அல்லது 20.7 மைல்) என்ற உயரத்திற்கு இந்த Chicken Nugget சென்றது. இது விண்வெளிக்கு மிக நெருக்கமான பகுதி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

இந்த Chicken Nugget குறைந்த அழுத்தம் மற்றும் கிட்டத்தட்ட -65 ° C வெப்பநிலையில் ஒரு மணி நேரம் வரை விண்வெளியில் மிதந்தது.

வேல்ஸில் உள்ள 'Iceland Foods Limited'  நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அருகில் எரிவாயு நிரப்பப்பட்ட பலூன் வழியாக இந்த சிக்கன் பதார்த்தம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டது, அந்த பலூனில் கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
விளம்பரத்திற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் செய்யும் சாகசங்களும், வித்தியாசமான சம்பவங்களும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்துகின்றன. ஆனால் வித்தியாசமான முயற்சிகளுக்கான விலையும் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும்... விண்வெளிக்கு சென்று இந்த சிக்கனை சாப்பிடப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Read Also | ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More