Home> Lifestyle
Advertisement

மாதவிடாய் வலியை ஆண்களுக்கும் உருவாக்கிய நிறுவனம்! பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஜப்பான்

Feel Women Pain Japan Technology : பெண்களின் உணர்வுகளை ஆண்கள் அனுபவிக்கச் செய்து அது பெண்களின் உணர்வையும், வலியையும் இக்கட்டையும் உணரும் வாய்ப்பை வழங்கிய பெரியோனாய்டு!

மாதவிடாய் வலியை ஆண்களுக்கும் உருவாக்கிய நிறுவனம்! பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஜப்பான்

Dysmenorrhea And Perionoid : கருப்பை ஒன்று தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்வது பொதுவானது. மாதவிடாய் என்பது தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று சொல்லப்படுவது உண்மை தான். கருப்பை இல்லாததால் ஆண்கள் மாதவிடாய் மற்றும் அதுதொடர்பான உணர்வுகளை உணர முடிவதில்லை.

ஆனால், அனைத்தையும் சாத்தியமாக்கும் அறிவியல் தொழில்நுட்பம், ஆண்களும் மாதவிடாய் சமயத்தில் பெண்கள் அனுபவிக்கும் உணர்வையும் வலியையும் உணர வைக்கும் முயற்சியை வெற்றியாக்கியுள்ளது.

நாம் தனிப்பட்ட முறையில் சந்திக்காத உணர்வுகள் மற்றும் அனுபவங்களை சரியாக புரிந்துக் கொள்ள முடியாது என்பதால் அவற்றை நிராகரிப்பது எளிது, ஆனால் இது போன்ற தருணங்கள் ஒரு சிறிய கணம் மட்டுமே வேறோருவர் அனுபவிக்கும் உணர்வை அனுபவிக்க உதவுகின்றன. ஜப்பானின் டோக்கியோவில் "பெரியோனாய்டு" (perionoid) சாதனம் பல இடங்களில் நிறுவப்பட்டு, பெண்களின் உணர்வுகளை ஆண்கள் அனுபவிக்கச் செய்து அது பெண்களின் உணர்வையும், வலியையும் இக்கட்டையும் உணரும் வாய்ப்பை வழங்கியது.

டோக்கியோ நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு மாதவிடாய் வலி (menstrual pain) எப்படி இருக்கும் என்று உணர்த்துவதற்காக கருவி மூலம் அவர்களுக்கு அந்த வலி உருவகப்படுத்தப்பட்டது. இயந்திரம் மூலம் செய்யப்பட்டாலும், அதை அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் தெரியுமா?

"என்னால் நகர முடியவில்லை. என்னால் நிற்க முடியாத அளவிற்கு வலித்தது" என்று 26 வயதான இளைஞர் ஒருவர், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.  

மேலும் படிக்க | ஆரோக்கியமாய் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்! நாட்டுக் காய்களின் அற்புத மேஜிக்!
  
சர்வதேச மகளிர் தினத்திற்கு (மார்ச் 8) ஒரு நாள் முன்பு, டோக்கியோவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தங்கள் பெண் ஊழியர்களின் உணர்வை புரிந்துக் கொள்ள உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வித்தியாசமான ஒரு அனுபவத்தை எதிர்கொண்டனர்.  

பெண்களுக்கு எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியுமா என்ன என இனி யாரும் சொல்ல முடியாதல்லவா?

சர்வதேச மகளிர் தினத்தன்று, மாதவிடாய் வலி உட்பட பெண்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் பிரச்சினைகளை ஆண்களும் புரிந்துக் கொள்வது மிகவும் முக்கியமானது, இது டிஸ்மெனோரியா (dysmenorrhea) என்றும் அழைக்கப்படும் பெண்களின் மாதவிடாய் உணர்வுகள், பெண்களின் ஆரோக்கியத்தின் பொதுவான மற்றும் அடிக்கடி கவனிக்கப்படாத அம்சமாகும், இது அன்றாட வாழ்க்கை மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கலாம்.

மேலும் படிக்க | glowing Skin tips: ஒரு வாரத்தில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்

EXEO குழுமத்தால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில், தொழிலாளர்கள் "பெரியோனாய்டு" என்ற சாதனத்தைப் பயன்படுத்தி மாதவிடாய் வலியின் உருவகப்படுத்தப்பட்ட அனுபவத்தை அனுபவித்தனர். இந்த சாதனம் கீழ் வயிற்றின் தசைகளில் தசைப்பிடிப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்கு மின் சமிக்ஞைகளை அனுப்பியது. பல பங்கேற்பாளர்கள் பெற்ற புதிய புரிதலை ஆண்களின் உணர்வுகள் எதிரொலித்தன.

"ஒவ்வொரு மாதமும் இந்த வலியை எதிர்த்துப் போராடிக் கொண்டே பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். உண்மையில் பெண்கள் அதை எப்படிச் செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் மீதான மரியாதை அதிகரிக்கிறது" என்று ஆண்கள் கூறுகின்றனர்.

EXEO குழுமம், அதன் பிரதானமாக (90 சதவீதத்திற்கும் அதிகமான) ஆண் பணியாளர்களுடன், அதன் பெண் ஊழியர்களுக்கு, குறிப்பாக மாதவிடாய் விடுப்பு தொடர்பாக, அதிக ஆதரவான சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜப்பானிய சட்டம் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்களை அறிவுறுத்துகிரது. ஆனால், அந்த விடுப்பை பெண்கள் பயன்படுத்துவதில்லை.   

மேலும் படிக்க | Hair Growth: முடி வளர்ச்சிக்கு ஆயுர்வேத மூலிகைகள்.. ரெண்டே வாரத்துல வித்தியாசம் தெரியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More