Home> Lifestyle
Advertisement

இது தான் கடைசி நாள்... பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வருமான வரித்துறை

Pan-Aadhar Link: மார்ச் 31க்குள் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும், இல்லையெனில் பான் கார்டு செயலிழக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை

இது தான் கடைசி நாள்... பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வருமான வரித்துறை

Pan Card Link With Aadhar: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், மார்ச் 31, 2023க்குள் இணைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏப்ரல் 1, 2023 அன்று உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ட்வீட் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. வருமான வரிச் சட்டம் 1961 இன் படி, விலக்கு பெற்ற பிரிவில் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் மார்ச் 31, 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

உங்கள் பான் கார்டு செயலிழக்கலாம்- எச்சரிக்கை
பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணம். இது வருமான வரித்துறையால் விநியோகிக்கப்படுகிறது. இது இல்லாமல் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. வருமான வரித் துறை உங்கள் நிதி பரிவர்த்தனைகளை தகவலை பான் எண் மூலம் மட்டுமே பதிவு செய்கிறது. ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே பான் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தரவைச் சேமிக்க பான் எண் கட்டாயமாகும். நாட்டில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், உங்கள் பான் கார்டு செயலிழந்தால் ​​பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இரண்டு பான் எண்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே உடனடியாக உங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். 

மேலும் படிக்க: திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?
ஆன்லைனில் உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க, நீங்கள் முதலில் வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

இங்கே முகப்புப் பக்கத்தில் உள்ள "விரைவு இணைப்புகள்" (Quick Links) என இருப்பதை கிளிக் செய்து, "இணைப்பு ஆதார்" (Link Aadhaar) துணை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து தோன்றும் திரையில் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை படிவத்தில் உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் படி உங்கள் பெயரை நிரப்ப வேண்டும். 

நீங்கள் நிரப்பிய விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்துவிட்டு, "I Validate My Aadhaar Details" என்ற ஆப்ஷன் செலக்ட் செய்து Continue ஆப்ஷன் கிளிக் செய்யவும்.

நீங்கள் ரெஜிஸ்டர் செய்த தொலைபேசி எண்ணுக்கு OTT அனுப்பப்படும். "Validate Option-ஐ செலக்ட் செயது, Continue ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு, “ஆதாரை இணைக்கவும்” என்ற விருப்பம் உங்கள் முன் தோன்றும். அதை கிளிக் செய்யவும். இந்த செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

மேலும் படிக்க: PAN Card Uses: பான் கார்டு எதற்கெல்லாம் தேவை? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More