Home> Lifestyle
Advertisement

Padma Awards 2023: பத்ம விருதுகள், தமிழகத்தில் யார் யாருக்கு விருது?

Padma Awards 2023: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 6 பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகளுடன் மொத்தம் 106 பத்ம விருதுகளை இந்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

Padma Awards 2023: பத்ம விருதுகள், தமிழகத்தில் யார் யாருக்கு விருது?

கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்றவை உட்பட ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 106 பத்ம விருதுகளை இந்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தொடர்பான மக்களின் எதிர்ப்பார்ப்பு பொய்க்குமா? மெய்யாகுமா? 

கே கல்யாணசுந்தரம் பிள்ளை: பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி: மருத்துவ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி வாணி ஜெயராம்: கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் கல்யாணசுந்தரம்: நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல், மாசி: தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருது 2023 பட்டியல்

பத்ம விபூஷன் விருது (6): ஸ்ரீ பாலகிருஷ்ண தோஷி, ஸ்ரீ ஜாகீர் ஹூசேன், ஸ்ரீ ஸ்ரீனிவாஸ் வரதன், ஸ்ரீ முலயாம்சிங் யாதவ், ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா, ஸ்ரீ திலீப் மஹாலானபிஸ். 

பத்ம பூஷன் விருது (9): குமார்மங்கலம் பிர்லா, தீபிகா தர், வாணி ஜெயராம், எஸ்.எல். பைராப்பா, சுவாமி சின்ன ஜியார், சுமன் கல்யாண்பூர், கபில் கபூர், சுதா மூர்த்தி, கமலேஷ் பட்டேல்.

பத்மஸ்ரீ விருது (91): சுகமா ஆச்சார்யா, ஜோதையாபாய் பைகா, பிரேம்ஜித் பாரியா, உஷா பார்லே, முனீஸ்வர் சந்தாவார், ஹேமந்த் சவுகான், பானுபாய் சித்தாரா, ஹீமோப்ரோவா சுட்டியா, நரேந்திர சந்திர தேபர்மா, சுபத்ரா தேவி, கதர் வல்லி துதேகுல, ஹேம் சந்திர கோஸ்வாமி, பிரித்திகானா கோஸ்வாமி, ராதா சரண் குப்தா, மொடடுகு விஜய் குப்தா, அகமது ஹுசைன் & முகமது ஹுசைன், தில்ஷாத் ஹுசைன், பிகு ராம்ஜி இடதே, சி ஐ ஐசக், ரத்தன் சிங் ஜக்கி, பிக்ரம் பகதூர் ஜமாத்தியா, ராம்குய்வாங்பே ஜீன், ராகேஷ் ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலா, ரத்தன் சந்திர கர், மஹிபத் கவி, எம் எம் கீரவாணி, அரீஸ் கம்பட்டா, பரசுராம் கோமாஜி குனே, கணேஷ் நாகப்பா கிருஷ்ணராஜநகரா, மகுனி சரண் குவான்ர், ஆனந்த் குமார், அரவிந்த் குமார், தோமர் சிங் குன்வர், ரைசிங்போர் குர்கலங், ஹிராபாய் லோபி, மூல்சந்த் லோதா, ராணி மச்சையா, அஜய் குமார் மாண்டவி, பிரபாகர் பானுதாஸ் மாண்டே, கஜானன் ஜகந்நாத் மானே, அந்தர்யாமி மிஸ்ரா, நாடோஜா பிண்டிபாப்பனஹள்ளி முனிவெங்கடப்பா, பேராசிரியர் (டாக்டர்) மகேந்திர பால், உமா சங்கர் பாண்டே, ரமேஷ் பர்மர் & சாந்தி பர்மர், நளினி பார்த்தசாரதி, மந்த ராவ் பசுபுலேட்டி, ரமேஷ் பதங்கே, கிருஷ்ணா பட்டேல், கே கல்யாணசுந்தரம் பிள்ளை, வி பி அப்புக்குட்டன் பொடுவாள், கபில் தேவ் பிரசாத், எஸ் ஆர் டி பிரசாத், ஷா ரஷீத் அகமது குவாட்ரி, சி வி ராஜு, பக்ஷி ராம், செருவயல் கே ராமன், சுஜாதா ராம்துரை, அப்பாரெட்டி நாகேஸ்வர ராவ், பரேஷ்பாய் ரத்வா, பி ராமகிருஷ்ண ரெட்டி, மங்கள காந்தி ராய், கே சி ரன்ரெம்சங்கி, வடிவேல் கோபால் & மாசி சடையன், மனோரஞ்சன் சாஹு, பட்டயத் சாஹு, ரித்விக் சன்யால், கோட்டா சச்சிதானந்த சாஸ்திரி, சங்குராத்திரி சந்திர சேகர், கே ஷனதோய்பா ஷர்மா, நெக்ரம் ஷர்மா, குர்சரண் சிங், லக்ஷ்மன் சிங், மோகன் சிங், தூணோஜம் சாவோபா சிங், பிரகாஷ் சந்திர சூட், Neihunuo Sorhie, டாக்டர். ஜானும் சிங் சோய், குஷோக் திக்சே நவாங் சம்பா ஸ்டான்சின், எஸ் சுப்பராமன், மோவா சுபோங், பழம் கல்யாண சுந்தரம், ரவீனா ரவி டாண்டன், விஸ்வநாத் பிரசாத் திவாரி, தனிராம் டோட்டோ, துலா ராம் உப்ரீதி, கோபால்சாமி வேலுச்சாமி, ஈஸ்வர் சந்தர் வர்மா, கோமி நாரிமன் வாடியா, கர்மா வாங்குச்சு, குலாம் முஹம்மது ஜாஸ்.

மேலும் படிக்க | Budget 2023: நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் வரி அடுக்கில் மாற்றம் இருக்குமா..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More