Home> Lifestyle
Advertisement

Tech Tip: whatsapp-ல் மற்றவர் டெலிட் செய்த மெஸேஜ்களை பார்ப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய செய்தியை டெலிட் செய்த செய்தியை என்ன என தெரிந்து கொள்ள சில வழிகள்..!

Tech Tip: whatsapp-ல் மற்றவர் டெலிட் செய்த மெஸேஜ்களை பார்ப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய செய்தியை டெலிட் செய்த செய்தியை என்ன என தெரிந்து கொள்ள சில வழிகள்..!

தற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க முயற்சிக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய செய்தியை டெலிட் செய்த செய்தியை என்ன என தெரிந்து கொள்ள சில வழிகளை உங்களுக்கு கூறுகிறோம். 

அதாவது, நாம் அனுப்பிய செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிரந்தரமாக டெலிட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது. இந்த வசதியின் படி நாம் ஒரு செய்தியை நிரந்தரமாக டெலிட் செய்துவிட்டால் அனுப்பவட்டவருக்கும் நாமும் மீண்டும் அந்த மெசேஜை பார்க்க முடியாது. ஆனால், வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த செய்தியை என்னவென்று நாம் பார்க்க வேறுசில வழிகளால் முடியும். அதற்கு வேறொரு செயலியை நீங்கள் உங்களது ஆன்டராய்டு மொபைலில் பதவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது உங்களது சொந்த விருப்பமாகும்.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்ப்பது எப்படி?

  • முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் WhatsRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • அந்த செயலியை பதிவிறக்கம் செய்த பின் அது கேட்கும் தகவல்களுக்கு அனுமதி வழங்கவும்
  • அதன்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும் பட்டியலில் வாட்ஸ்அப்பை தேர்வு செய்யவும்.அதைதொடர்ந்து திரையில் வரும் save files என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
  • தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள மெசேஜ் முதல் டெலிட் செய்த அனைத்து மெசேஜ்களும் WhatsRemoved+ செயலியில் வந்துவிடும்.
  • ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே இதைப் போன்ற ஆப்ஷன் உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு இதைப் போன்ற எந்த செயலியும் இல்லை. மேலும் ப்ளே ஸ்டோரில் இதுப்போன்று பல் ஆப்கள் இருந்தாலும் இதற்கு பலர் சிறந்த ரேங்க்கிங் கொடுத்துள்ளனர்.
Read More