Home> Lifestyle
Advertisement

நவராத்திரி பூஜை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்படி கொண்டாடுவது

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரி பூஜை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்படி கொண்டாடுவது

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும். 

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.

ALSO READ | Navrathri: நவராத்திரியின் ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை வழிபாடு

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை
வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். 

சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

இன்றைய விழாவின் சிறப்பம்சங்கள்

தேவி: சரஸ்வதி தேவி,
மலர்: தாமரை,
நெய்வேதியம்: அக்காரவடிசல்,
கோலம்: வாசனை பொடிகளால் ஆயுதம் போல பத்ம கோலமிட வேண்டும்,
ராகம்: வசந்தா ராகம்

ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More