Home> Lifestyle
Advertisement

Loggerhead turtles: பருவநிலை மாற்றம்: பூமியின் வடக்குப் பகுதியில் நீண்டதலை ஆமைகள்

வடக்கு இத்தாலியில் உள்ள மணல் கடற்கரையில் நீண்ட தலை கொண்ட கடல் ஆமைகள் பிறந்திருப்பது உலகளாவிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய "விதிவிலக்கான" நிகழ்வு

Loggerhead turtles: பருவநிலை மாற்றம்: பூமியின் வடக்குப் பகுதியில் நீண்டதலை ஆமைகள்

வடக்கு இத்தாலியில் உள்ள மணல் கடற்கரையில் நீண்ட தலை கொண்ட கடல் ஆமைகள் பிறந்திருப்பது உலகளாவிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய "விதிவிலக்கான" நிகழ்வாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வடக்கு அட்ரியாடிக் கடற்கரையில் கரெட்டா (Caretta) கடல் ஆமை முட்டைகள், குஞ்சு பொறித்திருப்பது இதுவே முதல் முறை, இது அரிதிலும் அரிதாக நிகழ்ந்துள்ளது. ஒருசில தினங்களுக்கு முன்னதாக, வெனிஸுக்கு அருகிலுள்ள பிரபலமான கடலோர ரிசார்ட் உள்ள ஜெசோலோ கடற்கரையில் ஒன்பது கடல் ஆமைகள் பிறந்தன.

கருவுற்றிருந்த ஆமையானது, ஜூலை 9 அன்று இரவில் கடலில் இருந்து 25 மீட்டர் தொலைவில் 82 முட்டைகளை இட்டது.

ALSO READ | லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்

"இது உலகின் வடக்குப் பகுதி, உண்மையிலேயே விசித்திரமான புவியியல் இருப்பிடம்" என்று படுவா பல்கலைக்கழக கால்நடை நோயியல் பேராசிரியரும், கடல் விலங்குகளுக்கான ஆய்வுக் குழுவான செர்ட்டின் ஒருங்கிணைப்பாளருமான சாண்ட்ரோ மஸாரியோல் லா ரிபப்லிகா (La Repubblica) பத்திரிகையிடம் கூறினார்.

ஆமை முட்டை போட்டது தெரிந்ததுமே, அவற்றை பாதுகாப்பதற்காக, கூட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்புத் தடுப்பு போடப்பட்டிருந்தது. விலங்கு உரிமைக் குழுக்களின் தன்னார்வலர்கள், இரவும் பகலும் விழிப்புடன் இருந்து கண்காணித்து வந்தனர்.  .

ஜெசோலோவில் உள்ள டிராபிகேரியம் விலங்கியல் பூங்காவின் அறிவியல் இயக்குநர் டியாகோ கட்டரோசி, உள்ளூர் செய்தித்தாள், இல் மாட்டினோ டி படோவாவிடம் இதுபற்றி தெரிவித்தார்.

Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

"கடலை நோக்கி உயிரினங்கள் நகர்ந்து செல்வது என்பது அவற்றின் உள்ளுணர்வின் அடிப்படையிலானது. அவற்றின் உள்ளுணர்வே, கடற்கரை எங்கே இருக்கிறது என்பதை அவற்றுக்கு உணர்த்துகிறது. அவை உரிய இடம் தேடிச் சென்று முட்டையிட்டு திரும்புகின்றன" என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடலை நோக்கி கடல்வாழ் உயிரினங்கள் செல்வதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக மணல் பாதுகாப்பு பாதையில் நீண்ட தலை ஆமைகள் பிறந்துள்ளன.

பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle) என்பது உலகில் இருக்கும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ (35 அங்குலம்) வரை வளரக்கூடியவை. உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட ஆமை வகைகளில் இதுவும் ஒன்றாகும். இவை 47 முதல் 67 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.  

ALSO READ | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More