Home> Lifestyle
Advertisement

தனது மனைவியின் மோதிரத்தை திருடி காதலிக்கு பரிசாக வழங்கிய கலாப காதலன்!

புளோரிடா ஆண் தனக்கு வருங்கால மனைவியின் கையில் இருந்த நிச்சயதார்த்தை திருடி காதலிக்கு பரிசாக வழங்கிய சம்பவம் வைரளாகியுள்ளது..!

தனது மனைவியின் மோதிரத்தை திருடி காதலிக்கு பரிசாக வழங்கிய கலாப காதலன்!

புளோரிடா ஆண் தனக்கு வருங்கால மனைவியின் கையில் இருந்த நிச்சயதார்த்தை திருடி காதலிக்கு பரிசாக வழங்கிய சம்பவம் வைரளாகியுள்ளது..!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் (VALENTINE'S DAY) கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் காதலுக்காக உருகும் இந்த நாளில், இந்த மாதிரியான ஆளும் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.. அமெரிக்காவின் புளோரிடாவில் (Florida) உள்ள ஆரஞ்சு சிட்டியை (Orange City) சேர்ந்த பெண் ஒருவர், இந்த ஆண்டின் துவக்கத்தில் தனது காதலனுக்கு மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் (Engagement) முடிந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

காதலனின் வருங்கால மனைவியின் Facebook-யை பார்த்த போது, நிச்சயதார்த்தத்தில் அந்த பெண் அணிந்திருந்த மோதிரமும், திருமண பேண்ட்டும் தன்னிடம் இருப்பதை போலவே இருந்ததை கண்டிருக்கிறார். ஒருவேளை அது தன்னுடையது தானோ என்ற சந்தேகத்தில், தனது நகை பெட்டியை (jewelry box) திறந்த பார்த்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே, அந்த குறிப்பிட்ட மோதிரத்தையும், திருமண பேண்ட்டையும் காணவில்லை. அத்துடன் மேலும், சில நகைகளையும், வைர மோதிரம் ஒன்றும் காணாமல் போனது கண்டு அதிர்ந்திருக்கிறார்.

ALSO READ | #HappyValentineDay2021: இந்த காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்!!

காதலன் சுமார் 6,270 டாலர் மதிப்புள்ள சொத்தை திருடியதாக போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். ஜோசப் டேவிஸ் (Joseph Davis) என்ற அந்த நபரை கைது செய்த போலீசார், அவர் மீது வாரண்ட் பிறப்பித்திருக்கின்றனர். அவரது காதலிகளான ஜோ பிரவுன் (Joe Brown) மற்றும் மார்கஸ் பிரவுன் (Marcus Brown) என்ற இரு பெண்களும் டேவிஸ் உடனான தங்கள் உறவை முறித்து கொண்டனர். ஆனால் கதையில் இங்கு தான் டுவிஸ்ட். 

அவரது வருங்கால மனைவியும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். டேவிஸ் ஒருமுறை அவரை தனது காதலியிடம் இருந்த ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று, அது தன்னுடைய வீடு என்று அளந்து விட்டிருக்கிறார். மேலும் தனது லேப்டாப் மற்றும் நகைகள் காணாமல் போனதாகவும், டேவிஸ் தான் அதை திருடியிருப்பார் எனவும் புகார் அளித்திருக்கிறார். டேவிஸின் கையில் ‘Only God can judge me’ என பச்சை குத்தியிருந்தாராம். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More