Home> Lifestyle
Advertisement

சந்திர கிரகணம் 2020: இந்திய நேரம், தேதி மற்றும் பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரனர் யார்?

இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் (Strawberry Moon Eclipse) என அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் 2020: இந்திய நேரம், தேதி மற்றும் பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரனர் யார்?

புதுடெல்லி: 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பெனும்பிரல் சந்திர கிரகணத்தைக் காண உலகம் தயாராக உள்ளது. இந்த ஆண்டு அதன் முதல் சந்திர கிரகணத்தை ஜனவரி 10 ஆம் தேதி கண்டது, இப்போது இரண்டாவது பெனும்பிரல் சந்திர கிரகணம் முறையே ஜூன் 5-6 இடைப்பட்ட இரவில் உள்ளது.

ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் - இரண்டாவது பெனும்பிரல் சந்திர கிரகணம் தெரியும்.

இந்தியாவில் கிரகண நேரங்கள்:

பெனும்பிரல் கிரகணம் 5 ஜூன், 23:15:51 (இரவு 11.15) தொடங்குகிறது.

அதிகபட்ச கிரகணம்: 6 ஜூன், 00:54:55 (காலை 12.54)

பெனும்பிரல் கிரகணம் 6 ஜூன், 02:34:03 (காலை 02.34) முடிவடைகிறது. 

அதாவது 3 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வு நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ்(Strawberry Moon Eclipse) என அழைக்கப்படுகிறது.

READ | இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது; வெறும் கண்களால் பார்க்கலாம்

இந்த சந்திர கிரகணத்தினால் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு ஏற்படும்:

கேட்டை நட்சத்திரமும், அதன் முன் மற்றும் பின் உள்ள அனுஷம், மூலம் நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். அதோடு கேட்டை நட்சத்திரம் புதன் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நட்சத்திரம் என்பதால் புதன் பகவான் ஆட்சி செய்யக் கூடிய நட்சத்திரங்களான ரேவதி, ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்வது அவசியம்.

பாதிக்கப்படும் நட்சத்திரங்கள்:

அனுஷம் நட்சத்திரம் - விருச்சிகம் ராசி

கேட்டை நட்சத்திரம் - விருச்சிகம் ராசி

மூலம் நட்சத்திரம் - தனுசு ராசி

ரேவதி நட்சத்திரம் - மீனம் ராசி

ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி

Read More